இன்சூரன்ஸ் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்சூரன்ஸ் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : ஆக 03, 2021
Share
மேட்டுப்பாளையம்:பொதுத்துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து, இன்சூரன்ஸ் அலுவலக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மேட்டுப்பாளையத்தில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலக பணியாளர்களும், நேஷனல் இன்சூரன்ஸ் அலுவலக பணியாளர்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட மேலாளர் ஜெகநாதன்

மேட்டுப்பாளையம்:பொதுத்துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து, இன்சூரன்ஸ் அலுவலக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மேட்டுப்பாளையத்தில், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலக பணியாளர்களும், நேஷனல் இன்சூரன்ஸ் அலுவலக பணியாளர்களும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோட்ட மேலாளர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.நான்கு பொதுத்துறை நிறுவனங்களை ஒன்று சேர்க்க வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களை, தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்தும், கோஷங்கள் எழுப்பப்பட்டன.நேஷனல் இன்சூரன்ஸ் கிளை மேலாளர் ஹேமலதா, உதவி மேலாளர் சத்திய பூபதி, நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X