இந்தியா

சரத் யாதவுடன் லாலு சந்திப்பு: சிராக் பஸ்வானுடன் கூட்டணி?

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி :முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவை, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று டில்லியில் சந்தித்து பேசினார். பீஹார் தேர்தலில் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வானுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக லாலு தெரிவித்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர் சரத் யாதவ், 74. கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர், லோக்
சரத் யாதவ், லாலு சந்திப்பு சிராக் பஸ்வானுடன் கூட்டணி?

புதுடில்லி :முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவை, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று டில்லியில் சந்தித்து பேசினார். பீஹார் தேர்தலில் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வானுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக லாலு தெரிவித்தார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர் சரத் யாதவ், 74. கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர், லோக் தந்ரிக் ஜனதா தளம் என்ற புதிய கட்சியை துவக்கினார். கடந்த லோக்சபா தேர்தலில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


latest tamil news



உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அவர், டில்லியில் தங்கியுள்ளார். இந்நிலையில் பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், டில்லியில் நேற்று சரத் யாதவை சந்தித்தார்.

இதன்பின் லாலு கூறியதாவது:சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ் மற்றும் என் போன்ற பொதுவுடைமை தலைவர்கள் தற்போது தீவிரமாக செயல்படாததால் மக்கள் பிரச்னைகளை பார்லிமென்ட் புறக்கணித்து வருகிறது.லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பஸ்வான் எதிர்காலத்தில் மிகப் பெரிய அரசியல் தலைவராக உருவெடுப்பார். பீஹாரில் அடுத்து நடக்கவுள்ள தேர்தல்களில் அவருடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து உள்ளோம். அதற்கான பணிகளை என் மகன் தேஜஸ்வி யாதவ் மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
04-ஆக-202108:59:04 IST Report Abuse
duruvasar மன்னவனே அழலமா கண்ணீரை விடலாமா என்னுயிராய் நீ இருக்க உண் உயிராய் நான் இருக்க.... இப்படிதான் கண்களால் பேசியிருப்பாரகள் இரு பெருசுகளும்.
Rate this:
Cancel
venkatapathy - New Delhi,இந்தியா
04-ஆக-202108:19:26 IST Report Abuse
venkatapathy பெயில் வாங்கி வந்து அரசியல் வாதிகளை சந்திப்பது அரசியல் பேசி அரசியல் நிகழ்ச்சிகளில் ஈடுபடுவோரை பெயில்லை ரத்து செய்து உள்ளே அடையுங்கள்.
Rate this:
Cancel
chelvan durairaj - trichy,இந்தியா
04-ஆக-202102:22:17 IST Report Abuse
chelvan durairaj ithukku
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X