சரத் யாதவுடன் லாலு சந்திப்பு: சிராக் பஸ்வானுடன் கூட்டணி? | Dinamalar

இந்தியா

சரத் யாதவுடன் லாலு சந்திப்பு: சிராக் பஸ்வானுடன் கூட்டணி?

Updated : ஆக 04, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி :முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவை, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று டில்லியில் சந்தித்து பேசினார். பீஹார் தேர்தலில் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வானுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக லாலு தெரிவித்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர் சரத் யாதவ், 74. கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர், லோக்
சரத் யாதவ், லாலு சந்திப்பு சிராக் பஸ்வானுடன் கூட்டணி?

புதுடில்லி :முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவை, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் நேற்று டில்லியில் சந்தித்து பேசினார். பீஹார் தேர்தலில் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வானுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக லாலு தெரிவித்தார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர் சரத் யாதவ், 74. கருத்து வேறுபாடு காரணமாக அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர், லோக் தந்ரிக் ஜனதா தளம் என்ற புதிய கட்சியை துவக்கினார். கடந்த லோக்சபா தேர்தலில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


latest tamil news



உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அவர், டில்லியில் தங்கியுள்ளார். இந்நிலையில் பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், டில்லியில் நேற்று சரத் யாதவை சந்தித்தார்.

இதன்பின் லாலு கூறியதாவது:சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ் மற்றும் என் போன்ற பொதுவுடைமை தலைவர்கள் தற்போது தீவிரமாக செயல்படாததால் மக்கள் பிரச்னைகளை பார்லிமென்ட் புறக்கணித்து வருகிறது.லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பஸ்வான் எதிர்காலத்தில் மிகப் பெரிய அரசியல் தலைவராக உருவெடுப்பார். பீஹாரில் அடுத்து நடக்கவுள்ள தேர்தல்களில் அவருடன் கூட்டணி அமைக்க முடிவு செய்து உள்ளோம். அதற்கான பணிகளை என் மகன் தேஜஸ்வி யாதவ் மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X