பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் ஜனாதிபதி 3 நாட்கள் முகாம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ஊட்டி:ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்று ஊட்டி வந்தார்.நீலகிரி மாவட்டம் குன்னுார் ராணுவக் கல்லுாரியில் இன்று நடக்கும் முப்படை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்த அவர், ராணுவ ஹெலிகாப்டரில், ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில்
 ஊட்டியில் ஜனாதிபதி 3 நாட்கள் முகாம்

ஊட்டி:ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேற்று ஊட்டி வந்தார்.நீலகிரி மாவட்டம் குன்னுார் ராணுவக் கல்லுாரியில் இன்று நடக்கும் முப்படை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார்.

இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்த அவர், ராணுவ ஹெலிகாப்டரில், ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கினார்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.பின், ஊட்டி ராஜ்பவனுக்கு காரில் வந்தார். ஜனாதிபதியுடன் அவரது குடும்பத்தார் மற்றும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரும் வந்தனர். மூன்று நாள் பயணமாக நேற்று வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்றும், நாளையும் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X