பொது செய்தி

தமிழ்நாடு

நிலுவைத்தொகை வழங்க தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:அமராவதி சர்க்கரை ஆலையில், கடந்தாண்டு அரவை ஏப்.,16ல் துவங்கி ஜூலை 1ம் தேதி நிறைவடைந்தது. இந்த பருவத்தில், 63, 560 டன் கரும்பு அரவை செய்யப்பட்டது.இந்த நிலையில், மே 21ம் தேதி வரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, கிரையத்தொகை வழங்கப்பட்டுள்ளது.மே 22ம் தேதி தொடங்கி, ஜூலை 1ம் தேதி வரை கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, அதற்கான தொகை, 9 கோடியே 81 லட்சம் ரூபாய்

மடத்துக்குளம்:அமராவதி சர்க்கரை ஆலையில், கடந்தாண்டு அரவை ஏப்.,16ல் துவங்கி ஜூலை 1ம் தேதி நிறைவடைந்தது. இந்த பருவத்தில், 63, 560 டன் கரும்பு அரவை செய்யப்பட்டது.இந்த நிலையில், மே 21ம் தேதி வரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, கிரையத்தொகை வழங்கப்பட்டுள்ளது.மே 22ம் தேதி தொடங்கி, ஜூலை 1ம் தேதி வரை கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, அதற்கான தொகை, 9 கோடியே 81 லட்சம் ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளது.இதுதவிர சேலம், தர்மபுரி, கரூர், உள்ளிட்ட வெளிமாவட்டங்களிலிருந்து வந்து கரும்பு அறுவடைக்கு ஈடுபட்ட, பல நுாறு தொழிலாளர்களுக்கு கூலித்தொகை, 2 கோடியே 3 லட்சம் ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், ஆலையில் பதிவு செய்துள்ள கரும்பு பதிவுக்கேற்ப, பயிர்க்கடன் கொடுப்பது வழக்கம். ஆனால், தற்போது வரை விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படவில்லை. உடனடியாக நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்' என்றனர்.கரும்புவெட்டும் தொழிலாளர்கள் கூறுகையில், 'கூலி தான் எங்கள் வாழ்வாதாரம். இந்த தொகை நிலுவையாக உள்ளதால், அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறோம். எனவே உடனடியாக நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X