பொது செய்தி

தமிழ்நாடு

எல்லை கண்காணிப்பில் ஓட்டை: செக்போஸ்ட்டில் கவனம் தேவை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு:வீரப்பகவுண்டனுார் செக்போஸ்ட் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமலும், காய்கறி லோடு வாகனங்களும், அதில் வருவோரும் பரிசோதனைக்கு உட்படுத்துவதில்லை.கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக - கேரள எல்லையான வீரப்பகவுண்டனுார் செக்போஸ்ட்டில், வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில், வருவாய்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை

கிணத்துக்கடவு:வீரப்பகவுண்டனுார் செக்போஸ்ட் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமலும், காய்கறி லோடு வாகனங்களும், அதில் வருவோரும் பரிசோதனைக்கு உட்படுத்துவதில்லை.கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக - கேரள எல்லையான வீரப்பகவுண்டனுார் செக்போஸ்ட்டில், வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில், வருவாய்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் 'ஷிப்ட்' முறையில் பணியாற்றுகின்றனர்.கிராமங்களில் தடுப்பூசி செலுத்துதல், பரிசோதனை முகாம் ஆகிய பணிகளில், சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளதால், வீரப்பகவுண்டனுார் செக்போஸ்ட் பணியில், கடந்த ஒரு மாதமாக சுகாதார பணியாளர்கள் ஈடுபடாமல் உள்ளனர்.சமீபமாக, இ-பாஸ் பெற்று வரும் வாகனங்கள் மட்டும், தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படும் நிலையில், நேற்று முன்தினம் முதல், கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கொண்டு வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.ஆனால், கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு காய்கறி லோடு கொண்டு செல்லும் வாகனங்களும், அதில் வருவோர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அனுமதிக்கின்றனர்.வசதிகள் இல்லைசெக்போஸ்ட் கண்காணிப்பு பணியில், வருவாய்துறையினர், உள்ளாட்சி துறையை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் என, நான்கு பேர் வீதம், மூன்று 'ஷிப்ட்'களில் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெண்களும் உள்ளனர்.செக்போஸ்ட் பகுதியில், போலீசாருக்கு நிரந்தர தங்கும் இடம் உள்ளது. வருவாய்துறை மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்களுக்கு தனி இடம் இல்லை. அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டடத்தின் வெளிப்பகுதியில் தங்குகின்றனர்.மழை, இரவு நேர குளிரால் அவதிப்படும் ஊழியர்கள் பொதுக்கழிப்பிடம் மற்றும் கண்காணிப்பு பணிக்கு அலுவலகம் இன்றி சிரமப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X