சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவிரியாற்றில் மூழ்கி புது மாப்பிள்ளை பலி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
நாமக்கல்:ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாட காவிரியாற்றுக்கு சென்ற புது மாப்பிள்ளை, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக்குமார், 29; கரூர் டி.என்.பி.எல்., ஆலையில் ஒப்பந்த தொழிலாளி. இவரது மனைவி மகிமா, 24; திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது.ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவதற்கு, நேற்று காலை 10:00 மணியளவில் இருவரும் குடும்பத்தினருடன்
 காவிரியாற்றில் மூழ்கி  புது மாப்பிள்ளை பலி

நாமக்கல்:ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாட காவிரியாற்றுக்கு சென்ற புது மாப்பிள்ளை, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தைச் சேர்ந்தவர் தீபக்குமார், 29; கரூர் டி.என்.பி.எல்., ஆலையில் ஒப்பந்த தொழிலாளி. இவரது மனைவி மகிமா, 24; திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது.ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவதற்கு, நேற்று காலை 10:00 மணியளவில் இருவரும் குடும்பத்தினருடன் ஜேடர்பாளையம் காவிரியாற்றுக்கு சென்றனர்.

முளைப்பாரி விடுவதற்காக தீபக்குமாரின் சகோதரி பரணி, தன் 3 வயது குழந்தையுடன் ஆற்றில் இறங்கினார்.நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், இருவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டனர். தீபக்குமார் தண்ணீரில் இறங்கி அவர்களை மீட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக தீபக்குமார் ஆழமான பகுதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள், தீபக்குமாரை சடலமாக மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X