கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிகிச்சை கட்டண வழக்கு சென்னைக்கு மாற்றம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மதுரை:கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கு விசாரணையை, சென்னைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுத்து, கண்காணிக்க அதிகாரிகள்

மதுரை:கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கு விசாரணையை, சென்னைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுத்து, கண்காணிக்க அதிகாரிகள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

அரசு நிர்ணயித்த கட்டண விபரங்களை அம்மருத்துவமனைகளின் அறிவிப்பு பலகைகளில் இடம் பெறச் செய்ய வேண்டும் என மத்திய - மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனு செய்தார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, எஸ்.ஆனந்தி அமர்வு, 'கொரோனா தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது. அத்துடன் சேர்த்து விசாரிக்க, இவ்வழக்கும் அங்கு மாற்றப்படுகிறது' என்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X