டெண்டர் முறைகேடு: அ.தி.மு.க.,வினர் முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டெண்டர் முறைகேடு: அ.தி.மு.க.,வினர் முற்றுகை

Added : ஆக 04, 2021
Share
திருப்போரூர்: டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி அ.தி.மு.க.,வினர் திருப்போரூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மறு டெண்டர் நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்போரூர் பேரூராட்சியின் 15 வார்டு களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பேரூராட்சியின் துாய்மைப் பணிக்கான டெண்டர் ஆண்டுதோறும் விடப்பட்டு, விதிமுறைகளின்படி தகுதியான

திருப்போரூர்: டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி அ.தி.மு.க.,வினர் திருப்போரூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மறு டெண்டர் நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் பேரூராட்சியின் 15 வார்டு களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பேரூராட்சியின் துாய்மைப் பணிக்கான டெண்டர் ஆண்டுதோறும் விடப்பட்டு, விதிமுறைகளின்படி தகுதியான நபருக்கு ஒப்பந்தப் பணி வழங்கப்படுகிறது.
இதில், 50க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் துாய்மைப் பணி, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் வேலை செய்கின்றனர். இதற்கான டெண்டர் கூட்டம், கடந்த 29ம் தேதி நடந்தது. இதில், ஐந்து பேர் விண்ணப்பித்தனர்.
டெண்டரில் முறைகேடு நடந்ததாகக் கூறி அ.தி.மு.க.,வினர், திருப்போரூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டு குவிந்தனர். திருப்போரூர் அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் குமரவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சிவராமன், நகர செயலர் முத்து உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள், பேரூராட்சி பொறுப்பு செயல் அலுவலர் கேசவனிடம், டெண்டர் குறித்து வாக்குவாதம் செய்தனர். மறு டெண்டர் நடத்த கூறினர்.
அதற்கு, பொறுப்பு செயல் அலுவலர் கேசவன். மறு டெண்டர் நடத்த இயலாது, ஆட்சேபனை கடிதம் கொடுங்கள் என கூறினார். இது குறித்து, பேரூராட்சி பொறுப்பு செயல் அலுவலர் கேசவன் கூறியதாவது:
டெண்டரில் எவ்வித முறைகேடும் நடக்க வில்லை. 'ஓப்பன்' டெண்டராக நடத்தப்பட்டுள்ளது. 'போட்டோ, வீடியோ' எடுக்கப்பட்டுஉள்ளது. 55 நிபந்தனைகளில், பாதி நிர்வாகம் சார்ந்தும் அடங்கியுள்ளது. ஐந்து பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், குறைந்த தொகை குறிப்பிட்டு விண்ணப்பித்தவருக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஒளிவு மறைவு ஏதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X