தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிப்பு

Added : ஆக 04, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் பா.ஜ., சார்பில் அனுசரிக்கப்பட்டது.கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், கோவில்பாளையம் காளியண்ணன்புதுார் கிளை சார்பில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் தனபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் பா.ஜ., சார்பில் அனுசரிக்கப்பட்டது.கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், கோவில்பாளையம் காளியண்ணன்புதுார் கிளை சார்பில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் தனபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்னுசாமி, ஒன்றிய பொதுச் செயலாளர் சுந்தரராஜ் முன்னிலை வகித்தனர்.ஊர் மைதானத்தில், தீரன் சின்னமலை உருவப்படம் அமைத்து, மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளி மாணவி ஜனவிகா, தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு, போர்கள், வீரம் மற்றும் தியாகம் குறித்து பேசினார். நிகழ்ச்சியில், பல்வேறு சமூக பிரதிநிதிகள், அமைப்பினர் மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X