பொது செய்தி

தமிழ்நாடு

நீரின்றி அமையாது உலகு! வேகமாக நிரம்புகிறது ஆழியாறு அணை:பாசன விவசாயிகள் முகத்தில் புன்னகை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால், தொடர்ந்து நான்காவது ஆண்டாக அணை நிரம்பப்போகிறது என, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள பாசனம் மற்றும் மக்களுக்கு குடிநீருக்காகவும் தண்ணீர் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயம், ஆழியாறு
 நீரின்றி அமையாது உலகு! வேகமாக நிரம்புகிறது ஆழியாறு அணை:பாசன விவசாயிகள் முகத்தில் புன்னகை

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால், தொடர்ந்து நான்காவது ஆண்டாக அணை நிரம்பப்போகிறது என, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள பாசனம் மற்றும் மக்களுக்கு குடிநீருக்காகவும் தண்ணீர் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயம், ஆழியாறு அணையை நம்பியே உள்ளது.
மேலும், அணையில் இருந்து, 13 கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்நிலையில், 2018 மற்றும், 2019ல் அதீத பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்து அணை நிரம்பியது. அதேபோல், கடந்தாண்டும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு இருந்ததால் செப்., மாதம் அணை முழு கொள்ளளவை எட்டியது.இந்தாண்டு ஜூன் இறுதி முதலே மழைக்காலம் துவங்கி, வால்பாறை, பரம்பிக்குளம், நவமலை உள்பட, ஆழியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்வதால், அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து, நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.கடந்த, 25ம் தேதி மொத்த கொள்ளளவான, 120 அடியில், 101 அடிக்கு நீர் மட்டம் உயர்ந்தது.
நேற்று காலை நிலவரப்படி, 120 அடியில், 109.30 அடிக்கு நீர் மட்டம் இருந்தது. இதுவே கடந்தாண்டு இதேநாளில், 60 அடிக்கு மட்டுமே நீர்மட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டை விட நடப்பாண்டு மிக விரைவில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது.வால்பாறை மலைப்பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், ஆழியாறு அணையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதேபோல், மழை பெய்தால் விரைவில் அணை நிரம்பும் என, விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் கூறியதாவது:ஆழியாறு அணை நிரம்பினால், புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்துக்கு ஒப்பந்தப்படி நீர் வழங்க ஏதுவான சூழல் நிலவும்.
மேலும், தொடர்ந்து நான்காவது ஆண்டாக, பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் போக நெல், கரும்பு, வாழை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும்.மீண்டும் நெல், கரும்பு சாகுபடி பரப்பு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி உபரி நீரை பயன்படுத்தி, சமத்துார் எலவக்கரை குளம், ஆனைமலை குளப்பத்து குளம் உள்ளிட்ட குளங்களை நிரப்பி விவசாயத்தை காக்க முடியும். குடிநீர் பஞ்சமும் ஏற்படாது.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர். -- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X