பொது செய்தி

தமிழ்நாடு

நிலங்களை ஆக்கிரமிக்கும் பார்த்தீனியம்: உரமாக பயன்படுத்த அறிவுரை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
உடுமலை;பருவமழைக்குப்பிறகு, தென்னந்தோப்புகளை ஆக்கிரமிக்கும், பார்த்தீனிய களைச்செடிகளை, மட்க வைத்து உரமாக பயன்படுத்த, தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், பார்த்தீனிய களைச்செடிகளின் பரவல் அதிகரித்துள்ளது. தென்னந்தோப்புகளில், இக்களைச்செடிகளை அழிக்க, அதிக செலவு செய்து விவசாயிகள் களைக்கொல்லி தெளிக்கின்றனர். தொடர்ந்து,

உடுமலை;பருவமழைக்குப்பிறகு, தென்னந்தோப்புகளை ஆக்கிரமிக்கும், பார்த்தீனிய களைச்செடிகளை, மட்க வைத்து உரமாக பயன்படுத்த, தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், பார்த்தீனிய களைச்செடிகளின் பரவல் அதிகரித்துள்ளது. தென்னந்தோப்புகளில், இக்களைச்செடிகளை அழிக்க, அதிக செலவு செய்து விவசாயிகள் களைக்கொல்லி தெளிக்கின்றனர். தொடர்ந்து, களைக்கொல்லி தெளிப்பதால், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அழிந்து பாதிப்புகள் ஏற்படும்.தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:அரைகுறையாக மட்காத குப்பையை, உரமாக இடுவதே களைச்செடிகள் பரவுவதற்கு முக்கிய காரணமாகும். கால்நடைகள் உண்ட களைச்செடி விதைகள், அவற்றின் சாணத்தை மட்கும் முன் உரமாக பயன்படுத்துவதால், அவ்விதைகள் முளைக்கின்றன.எனவே, மண் புழு உரத்தை தென்னை மரங்களுக்கு பயன்படுத்தினால், களைகள் வெகுவாக குறையும். களை செடிகளை சேகரித்து மட்கச்செய்து, உரமாக பயன்படுத்தலாம்.விளைநிலங்களில் கிடக்கும் இலைப்பரப்பு அதிகமுள்ள பசுந்தழைகள் அடங்கிய, மரங்களின் இலைகளை சேகரித்து, பார்த்தீனியம் உட்பட களைச்செடிகளை பதப்படுத்தி, உரக்குழியில் இட்டு, மண் புழு உரமாக மாற்றலாம்.உயிரியல் முறைப்படி, 'சைக்கோகிரம்மா' என்ற மஞ்சள் வண்ண வண்டுகளை சேகரம் செய்து, பார்த்தீனிய செடிகளில் விடலாம். அவை படிப்படியாக அச்செடிகளை அழிக்கும்.இவ்வாறு, வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X