பொது செய்தி

தமிழ்நாடு

நூலகங்கள் இல்லாமல் திணறும் ஒன்றியம்! இருப்பதை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
உடுமலை;பெதப்பம்பட்டி கிளை நுாலகத்துக்கு, கூடுதல் கட்டடம் கட்டி, தரம் உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், கடந்த 1967ம் ஆண்டு, கிளை நுாலகம் துவங்கப்பட்டது. இப்பகுதியில், பெதப்பம்பட்டி, கொங்கல்நகரம், வேலுார் உட்பட பகுதிகளில், அரசு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மட்டுமல்லாது, தனியார் கல்வி நிறுவனங்கள்

உடுமலை;பெதப்பம்பட்டி கிளை நுாலகத்துக்கு, கூடுதல் கட்டடம் கட்டி, தரம் உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், கடந்த 1967ம் ஆண்டு, கிளை நுாலகம் துவங்கப்பட்டது. இப்பகுதியில், பெதப்பம்பட்டி, கொங்கல்நகரம், வேலுார் உட்பட பகுதிகளில், அரசு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் மட்டுமல்லாது, தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.இப்பகுதியிலுள்ள 25க்கும் அதிகமான கிராமங்களில், படித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், ஒரே ஒரு கிளை நுாலகமாக பெதப்பம்பட்டி கிளை நுாலகம் மட்டுமே உள்ளது.இதனால், கிராமப்புற பள்ளி மாணவர்கள், தொழிற்கல்வி மற்றும் கலைக்கல்வி படிக்கும் மாணவர்கள், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகவும், இதர தேவைகளுக்கும் நுாலக வசதி இல்லாமல், பாதிக்கப்பட்டு வருகின்றனர்.உதாரணமாக, வீதம்பட்டி, வேலுார், வாகத்தொழுவு உட்பட கிராமங்களை சேர்ந்தவர்கள் நுாலகத்திற்காக 15 கி.மீ., வரை பயணிக்க வேண்டும். மூங்கில்தொழுவு, சிக்கனுாத்து, அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், விருகல்பட்டி உட்பட கிராம மக்களுக்கு இதே நிலை தான் காணப்படுகிறது.பெதப்பம்பட்டி கிளை நுாலகத்தை தரம் உயர்த்தி, கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனு: குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிகளில், பூளவாடி, பெதப்பம்பட்டி ஆகிய இரண்டு கிளை நுாலகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. ஊர்ப்புற நுாலகங்கள் ஒன்று கூட இப்பகுதியில் இல்லை.இதனால், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், 20 கி.மீ., துாரம் பயணித்து, உடுமலைக்கு செல்ல வேண்டியுள்ளது. அலைச்சல் உட்பட காரணங்களால், தேர்வுகளில், இளைஞர்கள் சாதிக்க முடிவதில்லை.எனவே, பெதப்பம்பட்டி நுாலகத்தை, உடனடியாக தரம் உயர்த்த வேண்டும். போட்டித்தேர்வுகளுக்கு தனியாக பிரிவு துவக்கி, கிராமப்புற இளைஞர்களுக்கு உதவ வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X