ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் துவக்கம் கொடியேற்றத்துடன் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் துவக்கம் கொடியேற்றத்துடன் துவக்கம்

Added : ஆக 04, 2021
Share
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.இதை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு மாட வீதிகள் சுற்றி கோயிலுக்கு கொடிப்பட்டம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து காலை 10:55 மணிக்கு கொடி மரத்தில் ரகுராம பட்டர் கொடியேற்றினார். ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் தக்கார்
 ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் துவக்கம் கொடியேற்றத்துடன் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.இதை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு மாட வீதிகள் சுற்றி கோயிலுக்கு கொடிப்பட்டம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து காலை 10:55 மணிக்கு கொடி மரத்தில் ரகுராம பட்டர் கொடியேற்றினார். ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள் பங்கேற்றனர். கோயிலில் தரிசனம் அனுமதிக்கப்படாததால் வாசலில் நின்று பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.


தங்க ரத தேரோட்டம்

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடப்பது வழக்கம். இதில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். கொரோனா பரவலால் 2020ல் தேர் திருவிழா நடக்கவில்லை. இந்தாண்டும் கொரோனா முன்னெச்சரிக்கையாக தேர் திருவிழா நடத்தாமல் ஆக. 11ல் காலை 9:05 மணிக்கு கோயில் வளாகத்திற்குள் தங்க ரத தேரோட்டம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X