சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 குற்றவாளிகள் கைது: கத்தி, அரிவாள் பறிமுதல்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்: சதித் திட்டம் தீட்டுவதற்காக திருப்புட்குழியில் தங்கியிருந்த, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ராபர்ட்கிளைவ், 23, என்பவர் வீட்டில், திருவேற்காடு

காஞ்சிபுரம்: சதித் திட்டம் தீட்டுவதற்காக திருப்புட்குழியில் தங்கியிருந்த, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளிகள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ராபர்ட்கிளைவ், 23, என்பவர் வீட்டில், திருவேற்காடு ராம்பிரசாத், 23; ஜெய்சதீஷ், 23; செந்தில், 23; பாலசந்தர், 19, ஆகியோர் தங்கியிருந்தனர். அவர்களின் நடவடிக்கைகள் அக்கம் பக்கம் உள்ள வர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாலுசெட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அவர்களை சுற்றிவளைத்து கைது செய்து, அவர்கள் வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் பழைய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X