பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டிபட்டி -தேனி அகல ரயில் பாதை இன்று சோதனை ஓட்டம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
தேனி:ஆண்டிபட்டி -தேனி இடையே அகல ரயில்பாதை பணி நிறைவு பெற்றதால் இன்று முதற்கட்ட சோதனை ஓட்டம் நடக்கிறது.மதுரை - போடி இடையே 90.4 கி.மீ. துார மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு ரூ.450 கோடியில் அகல ரயில்பாதை அமைக்கும் பணி 10 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பல ஆண்டுகளாக முடங்கிய இப்பணி இரு ஆண்டுகளாக துரிதப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக மதுரை- உசிலம்பட்டி இடையே ஏற்கனவே பணி முடிந்தது.

தேனி:ஆண்டிபட்டி -தேனி இடையே அகல ரயில்பாதை பணி நிறைவு பெற்றதால் இன்று முதற்கட்ட சோதனை ஓட்டம் நடக்கிறது.

மதுரை - போடி இடையே 90.4 கி.மீ. துார மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு ரூ.450 கோடியில் அகல ரயில்பாதை அமைக்கும் பணி 10 ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பல ஆண்டுகளாக முடங்கிய இப்பணி இரு ஆண்டுகளாக துரிதப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக மதுரை- உசிலம்பட்டி இடையே ஏற்கனவே பணி முடிந்தது.

அதன்பின் உசிலம்பட்டி - ஆண்டிபட்டி இடையே பணி முடிந்து டிசம்பரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் ஆண்டிபட்டி - தேனி இடையிலான 17 கி.மீ. துார அகல ரயில்பாதை பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. கொரோனா ஊரடங்கால் பணிகளில் தொய்வு ஏற்பட்டு தற்போது நிறைவு பெற்றுள்ளது.

தேனி ரயில்வே ஸ்டேஷன்,மூன்று இடங்களில் ரயில்வே கேட்டுகள், சிக்னல்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றது.ரயில்வே பாதுகாப்பு முதன்மை ஆணையர் அபய்குமார் ஆக.,15க்குள் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்ய உள்ளார். அதற்கு முன்னதாக இன்று ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை ரயில் இன்ஜினை 80 கி.மீ. வேகத்தில் இயக்கி அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

ரயில் இன்ஜின் காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணிக்குள் இயக்கப்பட உள்ளது. அதிவேக சோதனை ஓட்டத்தின் போது பொதுமக்கள் ரயில் பாதையை கடக்கவோ அருகில் செல்ல வேண்டாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X