பொது செய்தி

தமிழ்நாடு

பழமையான கோயிலை மூட வனத்துறை முயற்சி அர்ச்சகருக்கு நோட்டீஸ்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
உத்தமபாளையம்:வனப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சண்முகநாதர் கோயிலுக்கு பக்தர்கள் வருவதை தடுக்க, அர்ச்சகர்கணபதி, தாயார் சரஸ்வதிக்கு கம்பம் கிழக்கு ரேஞ்சர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே வனப்பகுதியில் பழமையான சண்முகநாதர் கோயில் உள்ளது. பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

உத்தமபாளையம்:வனப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சண்முகநாதர் கோயிலுக்கு பக்தர்கள் வருவதை தடுக்க, அர்ச்சகர்கணபதி, தாயார் சரஸ்வதிக்கு கம்பம் கிழக்கு ரேஞ்சர் சுரேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே வனப்பகுதியில் பழமையான சண்முகநாதர் கோயில் உள்ளது. பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இப்பகுதி கிராம மக்கள் தரிசனத்திற்கு செல்வர். இந்த கோயில் திருப்பணி, கும்பாபிேஷகம் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி ரகுபதி தலைமையிலான குழுவினர் மூலம் சமீபத்தில் நடந்தது.

தற்போது கோயிலிற்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளனர். மின் இணைப்பு தரக் கூடாது என வனத்துறை மின்வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கிடையே ஜூலை 12 தேதியிட்ட நோட்டீசை கோயில் அர்ச்சகர் கணபதி, தாயார் சரஸ்வதிக்கு, கம்பம் கிழக்கு ரேஞ்சர் சுரேஷ் அனுப்பியுள்ளார்.

அதில் ''நீங்கள் வனக்குற்றம் புரிய உள்ளதாக எனக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. ஜூலை 27 ல் என்முன் நேரில் ஆஜராக வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை காரணம் காட்டி ஒரு மாதம் அவகாசம் தருமாறு அர்ச்சகர் பதில் கடிதம் கொடுத்துஉள்ளார். சண்முகநாதன் கோயிலை மூடவே வனத்துறையினர் இவ்வாறு செய்வதாக பக்தர்கள் கொந்தளிக்கின்றனர்.

ரேஞ்சர் சுரேஷ் கூறியது:மேகமலை புலிகள்காப்பகமாக மாறிவிட்டதால்சண்முகநாதர் கோயிலில் தங்கியுள்ள அர்ச்சகர், அவரது தாயாரை வெளியேற்றவே நோட்டீஸ் கொடுத்து உள்ளேன். அது புலிகள் காப்பகமாக மாறியுள்ளதால் வனப்பகுதிக்குள் தங்க அனுமதி கிடையாது. கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கும் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X