சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெரியம்மா வெட்டிக்கொலை கல்லுாரி மாணவர் போலீசில் சரண்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம்தேவகோட்டை அருகே சொத்து பிரித்தது தொடர்பான தகராறில் பெரியம்மாவை கொலை செய்த கல்லுாரி மாணவர் போலீசில் சரணடைந்தார்.தேவகோட்டை அருகே தச்சவயலை சேர்ந்தவர் செல்வராஜ். பெங்களூருவில் வேலை செய்கிறார்.இவரது சகோதரர் சேகர் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சொத்து பிரித்து கொடுக்கப்பட்டது. இதில் சேகர் தரப்புக்கு

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம்தேவகோட்டை அருகே சொத்து பிரித்தது தொடர்பான தகராறில் பெரியம்மாவை கொலை செய்த கல்லுாரி மாணவர் போலீசில் சரணடைந்தார்.

தேவகோட்டை அருகே தச்சவயலை சேர்ந்தவர் செல்வராஜ். பெங்களூருவில் வேலை செய்கிறார்.இவரது சகோதரர் சேகர் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் சொத்து பிரித்து கொடுக்கப்பட்டது. இதில் சேகர் தரப்புக்கு திருப்தி இல்லை.

இதுதொடர்பாக கருத்துவேறுபாடு இருந்தது. நேற்று காலை செல்வராஜ் மனைவி மீனாட்சி 55, உறவினர் செல்லம்மா வீட்டருகே நின்று திட்டி கொண்டிருந்தார். சேகரின் மகனும், கல்லுாரி மாணவருமான பாலாஜி 19, அவருடன் தகராறு செய்தார். சொத்து பிரச்னைக்கு மீனாட்சி தான் காரணம் என அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பாலாஜி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X