பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் தேங்காத தெருவில் கால்வாய் எதற்கு?: அரசு நிதி வீண்!

Added : ஆக 04, 2021
Share
Advertisement
படப்பை: மழை நீர் தேங்காத தெருவில், இரண்டு பெரிய கால்வாய் அமைத்து, அரசு நிதியை அதிகாரிகள் வீணடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணிமங்கலம் ஊராட்சி, கச்சேரி மேட்டு தெருவில், இருபுறமும் 3 அடி அகலம், 2 அடி உயரத்தில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் 13.41 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன.இப்பணியை,
மழை நீர் தேங்காத தெருவில் கால்வாய் எதற்கு?: அரசு நிதி வீண்!

படப்பை: மழை நீர் தேங்காத தெருவில், இரண்டு பெரிய கால்வாய் அமைத்து, அரசு நிதியை அதிகாரிகள் வீணடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணிமங்கலம் ஊராட்சி, கச்சேரி மேட்டு தெருவில், இருபுறமும் 3 அடி அகலம், 2 அடி உயரத்தில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் 13.41 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன.
இப்பணியை, ஸ்ரீபெரும்புதுார் காங்., எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை துவக்கி வைத்தார். கச்சேரி மேட்டுத் தெருவில் இதுவரை பெய்த எந்த மழைக்கும் தண்ணீர் தேங்கியதில்லை. இந்த தெருவின் இருபுறமும் பெரிய கால்வாய் அமைப்பது அரசு நிதியை வீணடிக்கும் செயல் என குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
சாலையை சரியாக அளவீடு செய்து கால்வாய் கட்டப்படவில்லை. இருபுறமும் அகலமான கால்வாய் அமைப்பதால் சாலை மிகவும் குறுகிவிட்டது. மேலும், தெருவில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழந்தைகள், முதியோர் உள்ளனர். பிரதான சாலைகளில் அமைப்பது போல், திறந்த நிலையில் பெரிய கால்வாய் அமைத்துள்ளதால், குழந்தைகள், முதியோர் விழுந்து விபத்தில் சிக்குவர். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கால்வாய் மீது சிமென்ட் 'ஸ்லாப்' அமைத்து மூட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


நிதி வீணடிப்புக்கு யார் பொறுப்பு?


ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
மணிமங்கலத்தில் எந்தத் தெருவிலும் இதுவரை அமைக்காத வகையில், கச்சேரி மேட்டு தெருவில் 3 அடி அகலம், 2 அடி ஆழத்தில் கால்வாய் அமைக்கப்படுகிறது. இதில், வினாடிக்கு 12 கனஅடி நீரை எளிதாக வெளியேற்ற முடியும். குறுகலான தெருவில் இந்த கொள்ளளவில் கால்வாய் தேவையில்லை. இதனால் நிதி இழப்பு தான் ஏற்படும். மதிப்பீடு தயாரித்த பொறியாளர், அதற்கு ஒப்புதல் கொடுத்த அதிகாரிகள் தான், நிதி வீணடிப்பிற்கு காரணமானவர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X