கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாதிரியார் கோரிக்கை ஏற்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
மதுரை:ஹிந்து கடவுள்கள், பிரதமர் மோடியை விமர்சித்த வழக்கில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கை ரத்து செய்ய, அசல் எப்.ஐ.ஆர்., நகல் தாக்கல் செய்வதில் இருந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விலக்களித்தது.கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, ஹிந்து கடவுகள் குறித்தும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா

மதுரை:ஹிந்து கடவுள்கள், பிரதமர் மோடியை விமர்சித்த வழக்கில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வழக்கை ரத்து செய்ய, அசல் எப்.ஐ.ஆர்., நகல் தாக்கல் செய்வதில் இருந்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விலக்களித்தது.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, ஹிந்து கடவுகள் குறித்தும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சை கருத்துகளை தெரிவித்தார்.ஜாதி, மத விரோத உணர்வுகளை துாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் அருமனை போலீசார் வழக்குப் பதிந்து ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்தனர்.

இந்நிலையில் அவர், 'வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய அசல் எப்.ஐ.ஆர்., இணைக்க வேண்டியுள்ளது. 'கொரோனா காலகட்டம் என்பதால் அதை பெற இயலவில்லை. அதிலிருந்து விலக்களித்து எப்.ஐ.ஆர்., நகல் இணைத்து மனு செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார்.நீதிபதி ஜி.இளங்கோவன், ''மனு அனுமதிக்கப்படுகிறது. அசல் நகல் தாக்கல் செய்வதில் இருந்து, விலக்கு அளிக்கப்படுகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X