பொது செய்தி

தமிழ்நாடு

தீரன் சின்னமலை வரலாறு ஆங்கில நுால் வெளியீடு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ஈரோடு:தீரன் சின்னமலை வரலாறு குறித்து, ஆங்கில மொழிபெயர்ப்பு நுால் வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணி மண்டபத்தில், அவரது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள தீரன் சின்னமலை சிலைக்கு, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், பழநி ஆதினம் சாது சண்முக அடிகளார் ஆகியோர் மரியாதை
 தீரன் சின்னமலை வரலாறு  ஆங்கில நுால் வெளியீடு

ஈரோடு:தீரன் சின்னமலை வரலாறு குறித்து, ஆங்கில மொழிபெயர்ப்பு நுால் வெளியிடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணி மண்டபத்தில், அவரது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள தீரன் சின்னமலை சிலைக்கு, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், பழநி ஆதினம் சாது சண்முக அடிகளார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பின், தீரன் சின்னமலை வரலாற்றை முதன் முதலில் எழுதிய புலவர் குழந்தையின், 'தீரன் சின்னமலை வரலாறு' என்ற நுாலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நுால் வெளியிடப்பட்டது. ஆதினங்கள் வெளியிட, தீரன் சின்னமலை கூட்டமைப்பினர் பெற்றுக் கொண்டனர்.உடுமலை கொங்கு ஆய்வு மையத்தினர் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அரசு சார்பில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நினைவு தின விழா நடந்தது.வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் முன்னாள் அமைச்சர்கள், பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி உட்பட பலர் மாலை அணிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X