சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்று திறனாளியை மிரட்டிய தி.மு.க., நிர்வாகி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திருச்சி:மாற்றுத்திறனாளி பெண் சத்துணவு மேலாளரை தி.மு.க., மாவட்ட நிர்வாகி மிரட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திருச்சி மாவட்டம், துறையூர் யூனியன் அலுவலகத்தில் சத்துணவு மேலாளராக இருப்பவர் சந்திரிகா, 53; நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. இவர், 15 நாட்களுக்கு முன், நல்லவண்ணிப்பட்டி யூனியன் துவக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக உள்ள சினேக பிரபாவிடம், சத்துணவு

திருச்சி:மாற்றுத்திறனாளி பெண் சத்துணவு மேலாளரை தி.மு.க., மாவட்ட நிர்வாகி மிரட்டிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருச்சி மாவட்டம், துறையூர் யூனியன் அலுவலகத்தில் சத்துணவு மேலாளராக இருப்பவர் சந்திரிகா, 53; நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. இவர், 15 நாட்களுக்கு முன், நல்லவண்ணிப்பட்டி யூனியன் துவக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக உள்ள சினேக பிரபாவிடம், சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் புள்ளி விபரங்களை கேட்டுள்ளார். அவர் அதை கண்டுகொள்ளவில்லை.

ஜூலை 27ல், 'கண்டிப்பாக புள்ளி விபரம் வேண்டும்' என மொபைலில் போனில் சந்திரிகா கேட்டுள்ளார். அன்று மதியம் சத்துணவு மேலாளர் அலுவலகத்துக்கு வந்த சினேக பிரபா, 'நான் யார் தெரியுமா? என்னிடமே புள்ளி விபரம் கேட்டு டார்ச்சர் செய்கிறாயா' என ஒருமையில் பேசி சத்யதம் போட்டுள்ளார். மேலும், தன் கணவரும், தி.மு.க., வடக்கு மாவட்ட விவசாய அணி துணை செயலருமான முருகேசனுக்கு போன் செய்து அழைத்துள்ளார்.

அவரும் அலுவலகம் வந்து, மேலாளர் சந்திரிகாவை மாற்றுத்திறனாளி என்று பாராமல், 'உன்னை என்ன செய்கிறேன் பார்' என மிரட்டல் விடுத்துள்ளார்.அரை மணி நேரத்துக்கும் மேலாக சத்தம் போட்டு மிரட்டல் விடுத்த முருகேசனை, அங்கிருந்த அலுவலர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் முருகேசன், சத்துணவு மேலாளரை மிரட்டிய வீடியோ, இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X