கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' சிறப்பு டி.ஜி.பி.,யை ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
விழுப்புரம்:பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மற்றும் முன்னாள் எஸ்.பி.,யை வரும் 9ம் தேதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் உள்துறை செயலர் பிரபாகர் மற்றும்

விழுப்புரம்:பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மற்றும் முன்னாள் எஸ்.பி.,யை வரும் 9ம் தேதி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்த, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் உள்துறை செயலர் பிரபாகர் மற்றும் முன்னாள் டி.ஜி.பி., திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, சிறப்பு டி.ஜி.பி., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதும் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் மீதும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர்.பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி, ஏப்ரல் 23ம் தேதி விழுப்புரம் இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அவர் அளித்த ரகசிய வாக்குமூலத்தை, நீதிபதி பூர்ணிமா பதிவு செய்தார். கடந்த 29ம் தேதி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார், 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.இதற்கிடையே, 'இவ்வழக்கை தினந்தோறும் விசாரித்து, டிசம்பர் 20ம் தேதிக்குள் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும்' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாதன், 'இவ்வழக்கு விசாரணை வரும் 9ம் தேதி நடைபெறும்.அன்று முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மற்றும் முன்னாள் எஸ்.பி., கண்ணன் ஆகியோரை ஆஜர்படுத்த வேண்டும்' என சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு உத்தரவிட்டார். இருவருக்கும் சம்மன் அனுப்பும் நடவடிக்கை யில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X