பொது செய்தி

தமிழ்நாடு

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்: கோவில்களில் சிறப்பு வழிபாடு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடிப்பெருக்கையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ஆ. சங்கம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அம்மன், வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில்,
 ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்: கோவில்களில் சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆடிப்பெருக்கையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ஆ. சங்கம்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அம்மன், வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், விசாலாட்சி அம்மன், சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. சூளேஸ்வரன்பட்டி அழகாபுரி வீதி விஜயகணபதி கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அங்காளம்மன், சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.மாகாளியம்மன் கோவில், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சூலக்கல் மற்றும் தேவனாம்பாளையம் மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி அம்மனை வழிபட்டனர்.வால்பாறை, அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது. சுப்ரமணிய சுவாமி கோவில், வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில், காமாட்சியம்மன் கோவில்களில், அடிப்பெருக்கு வழிபாடு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X