இயக்குனர் ரஞ்சித்திற்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்றம் தடை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இயக்குனர் ரஞ்சித்திற்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்றம் தடை

Added : ஆக 04, 2021
Share
மதுரை:மன்னன் ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சினிமா இயக்குனர் ரஞ்சித் பேசியதாக பதிவான வழக்கில், கீழமை நீதிமன்றத்தில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது.தஞ்சாவூர் திருப்பனந்தாளில் 2019ல் நடந்த கூட்டத்தில், சினிமா இயக்குனர் ரஞ்சித் பேசுகையில், 'மன்னர் ராஜராஜ சோழன் காலம்தான் பொற்காலம் என்பர்.ஆனால், அவர் ஆண்ட காலம்

மதுரை:மன்னன் ராஜராஜ சோழன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சினிமா இயக்குனர் ரஞ்சித் பேசியதாக பதிவான வழக்கில், கீழமை நீதிமன்றத்தில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்தது.

தஞ்சாவூர் திருப்பனந்தாளில் 2019ல் நடந்த கூட்டத்தில், சினிமா இயக்குனர் ரஞ்சித் பேசுகையில், 'மன்னர் ராஜராஜ சோழன் காலம்தான் பொற்காலம் என்பர்.ஆனால், அவர் ஆண்ட காலம் தான், இருண்ட காலம். மிகப்பெரிய சூழ்ச்சி அடிப்படையில், எங்கள் நிலம் பறிக்கப்பட்டது அவரது ஆட்சியில் தான். ஜாதி ரீதியாக, மிகப்பெரிய ஒடுக்குமுறை ஆரம்பிக்கப்பட்டது அந்த ஆட்சியில்தான்' என்றார்.

ஜாதி, மத, இன விரோத உணர்ச்சியைத் துாண்டுதல், கலகம் செய்யும் வகையில் பேசுதல் பிரிவுகளில் ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் வழக்குப் பதிந்தனர். ரஞ்சித்திற்கு 2019ல் உயர் நீதிமன்றம் முன்ஜாமின் அனுமதித்தது. ரஞ்சித், 'என் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. உள்நோக்குடன் யாருக்கு எதிராகவும் பேசவில்லை.

பேச்சால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டே பேசினேன். வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்' என உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தார்.

நீதிபதி ஜி.இளங்கோவன் உத்தரவு:போலீசார் விசாரணையை தொடரலாம். இந்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளவரை, கீழமை நீதிமன்றத்தில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. விசாரணை ஆக., 31க்கு ஒத்தி வைக்கப் படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X