பொது செய்தி

தமிழ்நாடு

பசுமையாகும் கிராமங்கள்; ஊராட்சி நிர்வாகம் ஆர்வம்: 'வனத்துக்குள் திருப்பூரில்' 2,260 மரக்கன்று நடவு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
உடுமலை:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க, விவசாயம், தொழில் நிறுவனங்கள், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், குடிமங்கலம் ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிப்பகுதி முழுவதும் பசுமையாக மாற்ற, ஊராட்சித்தலைவர் வெங்கடேஷ் மற்றும் பொதுமக்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்தாண்டு,
 பசுமையாகும் கிராமங்கள்; ஊராட்சி நிர்வாகம் ஆர்வம்: 'வனத்துக்குள் திருப்பூரில்' 2,260 மரக்கன்று நடவு

உடுமலை:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க, விவசாயம், தொழில் நிறுவனங்கள், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், குடிமங்கலம் ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிப்பகுதி முழுவதும் பசுமையாக மாற்ற, ஊராட்சித்தலைவர் வெங்கடேஷ் மற்றும் பொதுமக்கள் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.கடந்தாண்டு, இத்திட்டத்தின் கீழ், கிராமத்திலுள்ள குளம் துார்வாரி, குளக்கரையை சுற்றிலும் பசுமையாக மாற்றும் வகையில் ஏராளமான மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர். தற்போது குளக்கரை பசுமையாக மாறியுள்ளது.நடப்பாண்டு, 'வனத்துக்குள் திருப்பூர்-7' திட்டத்தின் கீழ், பொது மயானம், பள்ளி வளாகங்கள், தெரு ஓரங்கள், பூங்கா ஒதுக்கீட்டு நிலங்கள் மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான நிலங்கள் என, 3 ஏக்கர் பரப்பளவில் பசுஞ்சோலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஊராட்சி பகுதிகளில், புங்கன் மரங்கள், 2,100, நாவல் மரங்கள், 25, நீர் மருது, 25, வேம்பு, 100, பூவரசன், 10 என, 2 ஆயிரத்து, 260 மரக்கன்றுகள் நடவு செய்துள்ளனர்.ஊராட்சித்தலைவர் கூறுகையில், 'பொதுமக்கள், வார்டு உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன், மரக்கன்றுகள் நடவு செய்து, ஊரக வேலை உறுதியளிப்புத்திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது' என்றார்.இதே போல், ஊராட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதியிலுள்ள, பூங்கா, பள்ளி வளாகங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்தால், ஒவ்வொரு கிராமமும் பசுமை சூழலுடன் உருவாகும், என திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.அதே போல், மடத்துக்குளம், மடத்துார், அரசு தோட்டக்கலைத்துறை பண்ணை வளாகத்தை சுற்றிலும், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், புங்கன், வேம்பு, பூவரசு, வன்னி, பாதாம், குமிழ், புளி, செம்மரம் என, 110 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. தோட்டக்கலைத்துறை அலுவலர் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X