எல்லையில் கண்காணிப்பு தீவிரம்: சான்று இருந்தால் மட்டுமே அனுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எல்லையில் கண்காணிப்பு தீவிரம்: சான்று இருந்தால் மட்டுமே அனுமதி

Added : ஆக 04, 2021
Share
உடுமலை:உடுமலையிலிருந்து, மறையூர், மூணாறு செல்லும் ரோட்டில், தமிழக - கேரளாஎல்லையில், சின்னாறில், வனத்துறை சோதனை சாவடி உள்ளது. அதே போல், அமராவதி வனச்சரகம், ஒன்பதாறு சோதனை சாவடி மற்றும் போலீஸ் சோதனை சாவடி உள்ளது.கேரள மாநிலம், மூணாறு, மறையூர் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் மக்கள், மருத்துவம், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உடுமலை வந்து செல்கின்றனர். மேலும்,
 எல்லையில் கண்காணிப்பு தீவிரம்: சான்று இருந்தால் மட்டுமே அனுமதி

உடுமலை:உடுமலையிலிருந்து, மறையூர், மூணாறு செல்லும் ரோட்டில், தமிழக - கேரளாஎல்லையில், சின்னாறில், வனத்துறை சோதனை சாவடி உள்ளது. அதே போல், அமராவதி வனச்சரகம், ஒன்பதாறு சோதனை சாவடி மற்றும் போலீஸ் சோதனை சாவடி உள்ளது.கேரள மாநிலம், மூணாறு, மறையூர் சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் மக்கள், மருத்துவம், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உடுமலை வந்து செல்கின்றனர். மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மக்களும் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.தினமும், கார், ஆட்டோ, ஜீப் மற்றும் சரக்கு வாகனங்கள் என, 450 வாகனங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். உடுமலை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். கேரளாவில் தொற்று பரவல் அதிகளவு உள்ளதால், கேரளா மாநிலத்திலிருந்து, தமிழகம் வரும் பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், ''மாநில எல்லையில், அமைந்துள்ள ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில், சுகாதாரத்துறை அலுவலர்களை கொண்ட தனிக்குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பணிக்கு வருவோர் மட்டும், உரிய விசாரணை அடிப்படையில் அனுமதிக்கப்படுவர். அவர்களும், தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்று, இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X