பொது செய்தி

தமிழ்நாடு

மாடு விற்பனை விறுவிறு: ரூ.3 கோடிக்கு வர்த்தகம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாட்டு சந்தையில், மாடுகள் வரத்து அதிகரித்ததுடன், விற்பனையும் விறு, விறுப்பாக நடந்தது.பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.நேற்று சந்தைக்கு மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.விற்பனை விறு, விறுப்பாக நடந்தது. வியாபாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது.

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாட்டு சந்தையில், மாடுகள் வரத்து அதிகரித்ததுடன், விற்பனையும் விறு, விறுப்பாக நடந்தது.பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.நேற்று சந்தைக்கு மாடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது.விற்பனை விறு, விறுப்பாக நடந்தது. வியாபாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம், 2,500 மாடுகள் வரத்து இருந்தது; வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. நாட்டு காளை, 70 - 75 ஆயிரம் ரூபாய்; நாட்டு பசு, 40 - 45 ஆயிரம்; நாட்டு எருமை, 45 - 50 ஆயிரம்; முரா, 55 - 60 ஆயிரம்; ஜெர்சி, 35 - 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம், 1,500 வியாபாரிகள் பங்கேற்றனர்.கொரோனா பெருந்தொற்று காரணமாக, நாளை (இன்று) முதல் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை சந்தை கூடாது என்பதால், வியாபாரிகள் அதிகளவில் பற்கேற்றதால், மூன்று கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X