பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் குறைப்பு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், 50 ரூபாயாக உயர்த்தப்பட்ட பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம், மூன்று மாதங்களுக்கு பிறகு குறைக்கப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி, தொற்று பரவல் அதிகரித்த நிலையில், ரயில்வே ஸ்டேஷனில் மக்கள் கூட்டத்தை குறைக்கும் திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த மே, 1ம் தேதி முதல் பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில், பிளாட்பார்ம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், 50 ரூபாயாக உயர்த்தப்பட்ட பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம், மூன்று மாதங்களுக்கு பிறகு குறைக்கப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி, தொற்று பரவல் அதிகரித்த நிலையில், ரயில்வே ஸ்டேஷனில் மக்கள் கூட்டத்தை குறைக்கும் திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த மே, 1ம் தேதி முதல் பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில், பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம், 10 ரூபாயில் இருந்து, 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது.உயர்த்தப்பட்ட கட்டணம், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனிலும் நடைமுறைக்கு வந்தது. இதனால், ரயில் பயணிகளுடன் வழியனுப்ப வரும் உறவினர்கள், நண்பர்கள் பாதிக்கப்பட்டனர்.பொள்ளாச்சி வழித்தடத்தில் இயங்கிய ரயில்களை, கொரோனா முதல் அலையின் போது ரத்து செய்து, மீண்டும் இயக்கிய போது, அமிர்தா எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்களை மட்டுமே ரயில்வே நிர்வாகம் இயக்குகிறது.பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை ஐந்து மடங்காக உயர்த்தியது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு, பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டு, மீண்டும், 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.இது, பயணிகள் மற்றும் உடன் வருவோருக்கு ஆறுதலை அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X