பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்றுப்படுகையில் ஆடிப்பெருக்கு :பழமை மாறாமல் கொண்டாட்டம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், ஆடிப்பெருக்கு நாளில் ஆற்றங்கரையில் திரண்ட மக்கள் இயற்கையையும், முன்னோர்களையும் வழிபட்டனர்.ஆடி மாதத்தில் பெய்யும் பருவமழையால், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்திருக்கும் நிலையில், பயிர் சாகுபடி செழிக்கவும், பருவம் தவறாது மழை பெய்ய வேண்டியும், ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம், 18ம் நாளில், பதினெட்டாம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், ஆடிப்பெருக்கு நாளில் ஆற்றங்கரையில் திரண்ட மக்கள் இயற்கையையும், முன்னோர்களையும் வழிபட்டனர்.ஆடி மாதத்தில் பெய்யும் பருவமழையால், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்திருக்கும் நிலையில், பயிர் சாகுபடி செழிக்கவும், பருவம் தவறாது மழை பெய்ய வேண்டியும், ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம், 18ம் நாளில், பதினெட்டாம் பெருக்கு என கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் ஆடி பட்டத்தில் சாகுபடி செய்து அமோக விளைச்சல் பெறுகின்றனர். இப்பருவத்தில், நெல், கரும்பு ஆகியன விதைத்து தை மாதத்தில் அறுவடை செய்வர். இந்நாளில், ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கை கொண்டாடி மகிழ்வர்.பொள்ளாச்சி பகுதியில், ஆடிப்பெருக்கு பண்டிகை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். கடந்தாண்டும் கொரோனா காரணமாக எளிமையாக கொண்டாடப்பட்டது.இந்தாண்டும் ஊரடங்கு காரணமாக அம்பராம்பாளையம் ஆற்றில் குறைந்த அளவு மக்கள் மட்டும் பாரம்பரியத்தை கைவிடாமல் கடைபிடித்து வழிபாடு செய்தனர்.வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, திருமாங்கல்ய சரடு வைத்து வழிபாடு செய்தனர். அதன்பின், வீட்டில் இருந்து கொண்டு வந்த கலவை சாதத்தை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.ஆழியாறு, அம்பராம்பாளையம், ஆனைமலை பகுதிகளில், ஆற்றங்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு படையல் வைத்தும் வழிபாடு நடத்தினர்.தேவனாம்பாளையம் அம்ணீஸ்வரர் கோவிலுக்கு வெளியே, சிற்றோடையின் கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, அதிகாலை முதல் நடந்தது. இதில், சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து அதிகமானோர் வந்து, அம்மணீஸ்வரரை வழிபட்டு திரும்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X