க்ரைம் செய்திகள்: பானிபூரி கடையில் ரகளை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் நந்த் கிேஷார் சவுராஸ்யா, 32. இவர், பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் வீதியில், பானிபூரி கடை நடத்தி வருகிறார்.நேற்றுமுன்தினம் இரவு ஆட்டோவில் வந்த கோட்டூர் ரோட்டை சேர்ந்த டிரைவர் பிரகாஷ்,32, பானிபூரி, காளான் வாங்கி சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு, கடைக்காரரை தாக்கி, கடையின் கண்ணாடியை உடைத்ததாக

பொள்ளாச்சி, ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் நந்த் கிேஷார் சவுராஸ்யா, 32. இவர், பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் வீதியில், பானிபூரி கடை நடத்தி வருகிறார்.நேற்றுமுன்தினம் இரவு ஆட்டோவில் வந்த கோட்டூர் ரோட்டை சேர்ந்த டிரைவர் பிரகாஷ்,32, பானிபூரி, காளான் வாங்கி சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு, கடைக்காரரை தாக்கி, கடையின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து, கடைக்காரர் கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரகாைஷ கைது செய்தனர்.

பெண்ணை மிரட்டியவர் கைது

பொள்ளாச்சி வாசவி நகரை சேர்ந்தவர் கோகிலவாணி,32. இவரது வீட்டு அருகே தனியார் இரும்பு தகர பட்டறை உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன், அங்கு பணியாற்றிய புருேஷாத்தமன்,29, மது குடிக்கிறார் என, உரிமையாளரிடம், கோகிலவாணி கூறியதாக தெரிகிறது.இதனால், இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் புருேஷாத்தமன், கோகிலவாணியின் வீட்டுக்கு முன் நின்று ஆபாசமாக திட்டி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து, கோகிலவாணி கொடுத்த புகாரின் பேரில், கிழக்குப்போலீசார் வழக்குப்பதிவு செய்து, புருேஷாத்தமனை கைது செய்தனர்.

அழுகிய நிலையில் ஆண் சடலம்

பொள்ளாச்சி, சிஞ்சுவாடியில் தனியார் தோட்டம் அருகே, அழுகிய நிலையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், கோமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். மோப்ப நாய் வரவழைத்து ஆய்வு செய்யப்பட்டது.போலீசார் கூறுகையில், 'இறந்தவர் யார் என அடையாளம் தெரியவில்லை. உடல் முழுவதும் மக்கிய நிலையில் உள்ளது. கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.

பெண் பலாத்காரம்: முதியவர் கைது

பொள்ளாச்சி அருகே, ராசிசெட்டிபாளையத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி முருகன், 72. மனைவியை பிரித்து பல ஆண்டுகளாக தனியாக வசிக்கிறார். இந்நிலையில் இவர், பொள்ளாச்சியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட, 28 வயதான பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், முதியவரை கைது செய்தனர்.

மது விற்ற பெண் கைது

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, மாலை, 5:00 மணிக்கு பேக்கரி, மளிகை மற்றும் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெகமம் அருகே, கப்பளாங்கரையில் தடைசெய்யப்பட்ட நேரத்தில் வீட்டில் பதுக்கி வைத்து, மது விற்றதாக வசந்தா, 42, என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் விற்பனைக்கு வைத்திருந்த, 37 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முதியவரிடம் வழிப்பறி

உடுமலை குரல்குட்டையைச்சேர்ந்தவர் பன்னீர்செல்வம்,63. உடுமலை - மடத்துார் ரோட்டில், கோழிப்பண்ணை அருகே, பைக்கை நிறுத்தி மொபைல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது, பைக்கில் வந்த மூன்று பேர், அவரை தாக்கி, மொபைல்போன் மற்றும் மூவாயிரம் ரூபாய் பணத்தை பறித்துச்சென்றனர். உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X