விஸ்தரிப்பு!கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அரசு இன்று...3 நாட்கள் நீடித்த இழுபறிக்கு பா.ஜ., மேலிடம் தீர்வு:துணை முதல்வர்எத்தனை பேர்?

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடக அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்படுகிறது. இதற்காக, மூன்று நாட்கள் டில்லியில் முகாமிட்ட முதல்வர் பசவராஜ் இன்று பெங்களூரு திரும்புகிறார். யார், யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்பது குறித்து, மூன்று நாட்கள் நீடித்த இழுபறிக்கு பா.ஜ., மேலிடம் ஒருவழியாக தீர்வு கண்டுள்ளது. இதன்படி, பழையவர்களுக்கு, 'ஷாக்' கொடுத்து, புதியவர்களுக்கு, 'ஜாக்பாட்' அடிக்கும்
விஸ்தரிப்பு!கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அரசு இன்று...3 நாட்கள் நீடித்த இழுபறிக்கு பா.ஜ., மேலிடம் தீர்வு:துணை முதல்வர்எத்தனை பேர்?

பெங்களூரு:கர்நாடக அமைச்சரவை இன்று விஸ்தரிக்கப்படுகிறது. இதற்காக, மூன்று நாட்கள் டில்லியில் முகாமிட்ட முதல்வர் பசவராஜ் இன்று பெங்களூரு திரும்புகிறார்.

யார், யாருக்கு அமைச்சர் பதவி வழங்குவது என்பது குறித்து, மூன்று நாட்கள் நீடித்த இழுபறிக்கு பா.ஜ., மேலிடம் ஒருவழியாக தீர்வு கண்டுள்ளது. இதன்படி, பழையவர்களுக்கு, 'ஷாக்' கொடுத்து, புதியவர்களுக்கு, 'ஜாக்பாட்' அடிக்கும் வாய்ப்புள்ளது.

கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை பதவி ஏற்று, நேற்றுடன் ஒரு வாரம் நிறைவு பெற்றது. அமைச்சரவை விஸ்தரிப்பு குறித்து விவாதிக்க, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா அவசர அழைப்பை ஏற்று, ஆக., 1ல் முதல்வர் திடீரென டில்லி புறப்பட்டார்.


அமித் ஷாவுடன் சந்திப்பு

இரண்டு நாட்களாக, மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, தர்மேந்திர பிரதான், பா.ஜ., தேசிய ஒருங்கிணைப்பு பொது செயலர் சந்தோஷ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அருண் சிங்கையும் முதல்வர் பசவராஜ் பொம்மை சந்தித்து பேசினார். கட்சியின் தேசிய தலைவர் நட்டாவுடன் ஆலோசித்தும் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், மூன்றாவது நாளாக டில்லியிலேயே தங்கிய பசவராஜ் பொம்மை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், பார்லிமென்டில் நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். அப்போது, 2023ல் நடக்கவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் மற்றும் 2024ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தல்களை கருத்தில் கொண்டு அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டும் என்று அமித் ஷா அறிவுறுத்தினார்.


மூத்தவர்களுக்கு 'ஷாக்'

கடந்த காலங்களில் அமைச்சர் பதவியை அனுபவித்த, மூத்த தலைவர்கள் பலரையும் நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கும்படி ஆலோசனை கூறியுள்ளார். இறுதியில் பார்லிமென்டில் இருந்த நட்டாவுடன், 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தி, ஒருவழியாக பட்டியல் இறுதி செய்யப்பட்டது.இந்நிலையில், நாளை காலை 11:00 மணிக்கு நடக்க இருந்த அமைச்சர்கள் பதவியேற்பு விழா, திடீரென இன்று பிற்பகல் 2:15 மணிக்கு நடத்தப்படும் என முதல்வர் அலுவலகம், ராஜ்பவனுக்கு தகவல் கொடுத்துள்ளது.


யார், யாருக்கு வாய்ப்பு?

பா.ஜ., தகவல்படி, இன்று 24 முதல் 26 பேர் முதல் கட்டமாக பதவியேற்க உள்ளனர். பதவியேற்புக்கு பின், அதிருப்தியில் உள்ளவர்களுக்கு அடுத்த மாதமே மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்து, வாய்ப்பு வழங்கப்படும்.யாரும் எதிர்பாராத வகையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன் விஜயேந்திரா, பா.ஜ.,வில் இணைவதாக அறிவித்துள்ள கொள்ளேகால் எம்.எல்.ஏ., மகேஷ் உட்பட சில புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டில்லியிலும், பெங்களூரிலும் அமைச்சர் பதவிக்காக பலரும், 'லாபி' செய்தனர். எனவே, யார், யார் பதவியேற்கவுள்ளனர், யாரெல்லாம் பதவி கிடைக்காமல் ஏமாற்றம் அடைவர் என இன்று தெரிய வரும்.

பதவி உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை, நேற்றிரவே தகவல் கொடுத்தார். மேலும், மூன்று நாட்கள் டில்லி பயணத்தை முடித்து, நேற்றிரவு 9:15 மணிக்கு பெங்களூரு திரும்ப, 'ஏர் இந்தியா' விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.ஆனால் பட்டியல் இறுதி செய்ய தாமதமானதால், திடீரென டிக்கெட் ரத்து செய்யப்பட்டது.

இன்று காலை 6:10 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு, காலை 8:50 மணிக்கு பெங்களூரு திரும்புகிறார்.

நட்டாவுடன் நடந்த சந்திப்புக்கு பின், பசவராஜ் பொம்மை கூறியதாவது:துணை முதல்வர் மற்றும் எத்தனை பேர் பதவியேற்பர் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. இன்று காலை அமைச்சர் பட்டியலுக்கு, நட்டா அனுமதி தருவார். அதன்பின், பட்டியல் வெளியிடப்படும். தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும்.

விஜயேந்திராவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து, எடியூரப்பாவுடன் நட்டாவே பேசுவார். எதிர்கால தேர்தல் மற்றும் நல்லாட்சி வழங்கும் வகையில், அனுபவசாலிகள், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X