சிறந்த அறிவாற்றல் மாணவியாக இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு

Added : ஆக 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன் :அமெரிக்க பல்கலை நடத்திய அறிவாற்றல் அதிகமுள்ள மாணவ - மாணவியர்களுக்கான தேர்வில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடாஷா பெரி 11 வெற்றி பெற்றுள்ளார்.அமெரிக்க கல்லுாரிகளில் சேர எஸ்.ஏ.டி. மற்றும் ஏ.சி.டி. என்ற தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் ஏதாவது ஒரு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணை வைத்துதான் கல்லுாரிகளில் சேர்க்கை நடக்கிறது.இந்த மதிப்பெண் அடிப்படையில்
சிறந்த அறிவாற்றல் மாணவி,  இந்திய வம்சாவளி சிறுமி தேர்வு

வாஷிங்டன் :அமெரிக்க பல்கலை நடத்திய அறிவாற்றல் அதிகமுள்ள மாணவ - மாணவியர்களுக்கான தேர்வில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடாஷா பெரி 11 வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க கல்லுாரிகளில் சேர எஸ்.ஏ.டி. மற்றும் ஏ.சி.டி. என்ற தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் ஏதாவது ஒரு தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணை வைத்துதான் கல்லுாரிகளில் சேர்க்கை நடக்கிறது.
இந்த மதிப்பெண் அடிப்படையில் பல நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குகின்றன.
இந்த தேர்வில் வெற்றி பெறுவோரில் சிறந்த அறிவாற்றல் உள்ளோரை கண்டறிய ஜான் ஹாப்கின்ஸ் பல்கலையின் வி.டி.வி. மையம் ஒரு தேர்வு நடத்து
கிறது.
இதில் உலகளவில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டு தேர்வில் 84 நாடுகளைச் சேர்ந்த 19 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றனர். அதில் 5ம் வகுப்பு மாணவியான நடாஷாவும் ஒருவர்.
அவருக்கு 'உயரிய கவுரவ விருது' வழங்கப்பட்டுள்ளது. நடாஷாவின் படிக்கும் திறன் ஒப்புவிக்கும் ஆற்றல் கணக்கியல் பகுப்பாய்வு ஆகியவற்றில் உள்ள ஞானம் போன்ற பல திறமைகள் எட்டாம் வகுப்பு மாணவிக்கு நிகராக உள்ளதாக தேர்வுக் குழு சான்றளித்துள்ளது.
''சாகச நாவல்களை படிப்பதும் வார்த்தை விளையாட்டுகளும் தான் என் பொழுது போக்கு'' என்கிறார் நடாஷா.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
04-ஆக-202107:26:35 IST Report Abuse
a natanasabapathy இந்தியாவாக இருந்தால் சாதியை வைத்து தான் திறமையை கணக்கிடுவார்கள் நல்லவேளை அமெரிக்காவில் இருக்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X