பொது செய்தி

தமிழ்நாடு

450 மகளிருக்கு இரண்டாம் நிலை: போலீசாருக்கான உடற்தகுதி தேர்வு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கோவை:போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு, கோவையில் நடக்கிறது. 450 பேர் பங்கேற்றனர்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, கடந்தாண்டு டிச.,ல் நடந்தது.கடந்த, 26ம் தேதி உடற்தகுதி, திறனறித் தேர்வுகள் துவங்கின. பாலசுந்தரம் ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம்,
 450 மகளிருக்கு இரண்டாம் நிலை: போலீசாருக்கான உடற்தகுதி தேர்வு

கோவை:போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு, கோவையில் நடக்கிறது. 450 பேர் பங்கேற்றனர்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம், இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, கடந்தாண்டு டிச.,ல் நடந்தது.கடந்த, 26ம் தேதி உடற்தகுதி, திறனறித் தேர்வுகள் துவங்கின. பாலசுந்தரம் ரோட்டில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம், ஆயுதப்படை மைதானத்தில் ஆண்களுக்கான உடல் தகுதித் தேர்வுகள் நடந்தன.தொடர்ந்து, பெண்களுக்கான இரு நாட்கள் தேர்வு துவங்கியது. அழைப்பு விடுக்கப்பட்ட, 500 பேரில், 450 பெண்கள் வந்திருந்தனர். உடல்தகுதி தேர்வை கோவை சரக டி.ஐ.ஜி., முத்துசாமி, மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் பார்வையிட்டனர். வரும் 6ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X