சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை திருப்திப்படுத்த உதவி போலீஸ் கமிஷனர் வேடம்: போலி அதிகாரி வாக்குமூலம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பட்டிவீரன்பட்டி;''தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தாலும், மனைவியை திருப்திபடுத்தவும் போலீஸ் உதவி கமிஷனர் வேடமிட்டேன்'' என போலீசிடம் சிக்கிய போலி அதிகாரி தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சுங்கச்சாவடியில் உதவி போலீஸ் கமிஷனர் என போலியாக கூறிய சென்னையை சேர்ந்த விஜயன் 41, கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது போலீசில் அவர் கூறியதாவது:4
 மனைவியை திருப்திப்படுத்த உதவி போலீஸ் கமிஷனர் வேடம்: போலி அதிகாரி வாக்குமூலம்

பட்டிவீரன்பட்டி;''தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தாலும், மனைவியை திருப்திபடுத்தவும் போலீஸ் உதவி கமிஷனர் வேடமிட்டேன்'' என போலீசிடம் சிக்கிய போலி அதிகாரி தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே சுங்கச்சாவடியில் உதவி போலீஸ் கமிஷனர் என போலியாக கூறிய சென்னையை சேர்ந்த விஜயன் 41, கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது போலீசில் அவர் கூறியதாவது:4 ஆண்டுகளுக்கு முன்பு லாரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. மனைவி 'பிளே ஸ்கூல்' நடத்துகிறார். வீட்டில் வேலையின்றி இருந்ததால் அடிக்கடி எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது.

அவரை திருப்திப்படுத்த முடிவு செய்தேன். போலீஸ் துறை மீதான ஆர்வத்தால் டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் டி.எஸ்.பி., ஆனதாக அவரிடம் பொய் கூறினேன். 10 மாதத்துக்கு முன்பு கோவை ஜெயமீனாட்சி என்ற குடும்ப நண்பரின் பெயரில் கார் வாங்கி ரூ.2 லட்சம் செலவு செய்து போலீஸ் வாகனமாக மாற்றினேன்.

கேரளா உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளேன் என்றார்.இரு மாநில முதல்வர்கள், முன்னாள் கவர்னர் ஒருவருடன் இருக்கும் போட்டோவை விசாரணை அதிகாரிகளிடம் காண்பித்துள்ளார். இந்த போட்டோவை எப்படி எடுத்தார் என்பதில் மர்மம் நீடிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X