திருட்டுப்போனது அபராதம்: போத்தனூர் போலீஸ் திணறல்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
போத்தனூர்:ஊரடங்கு காலத்தில் பிடிபட்ட, வாகன உரிமையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் அபராத தொகை மாயமானதால், போலீசார் திணறுகின்றனர்.நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலால், கடந்தாண்டு மார்ச் இறுதி வாரம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்துமீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றியவர்களிடமிருந்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கு பதிவு செய்யப்பட்டு,

போத்தனூர்:ஊரடங்கு காலத்தில் பிடிபட்ட, வாகன உரிமையாளர்களிடம் வசூலிக்கப்பட்ட பல லட்சம் ரூபாய் அபராத தொகை மாயமானதால், போலீசார் திணறுகின்றனர்.நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலால், கடந்தாண்டு மார்ச் இறுதி வாரம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்துமீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றியவர்களிடமிருந்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.இதுபோல், கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டிலுள்ள போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் சுமார், 630 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அபராத தொகையாக ஒவ்வொரு வாகனத்திற்கும், ரூ.2,000 வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு பின், டி.ஜி.பி., உத்தரவின்படி, வாகனங்கள், உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. அபராத தொகையை போலீசார் கோர்ட்டில் செலுத்தி, வழக்கை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.அவ்வகையில் வசூலிக்கப்பட்ட தொகையை, கோர்ட்டில் செலுத்த, உதவி கமிஷனர் நடவடிக்கை மேற்கொண்டார். அப்போது, அபராத தொகை பல லட்சம் ரூபாய் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் கோர்ட்டில் அபராத தொகையை, செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இச்சூழலை தவிர்க்க என்ன செய்வதென தெரியாமல், போலீசார் விழிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X