பொது செய்தி

தமிழ்நாடு

தீத்திபாளையத்தில் தோண்ட தோண்ட முறைகேடு; கலெக்டருக்கு பறந்தது புகார் கடிதம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கோவை;தொண்டாமுத்துார் ஒன்றியம், தீத்திபாளையம் ஊராட்சியில் நடந்த முறைகேடுகள் மற்றும் தவறுகளை பட்டியலிட்டு, துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு, புகார் மனு அனுப்பியுள்ளனர்.அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:தீத்திபாளையத்தில் பயன்பாட்டில் இருந்த பொதுக்கழிப்பறைக்கு பின்புறம், ஊராட்சி தலைவர்

கோவை;தொண்டாமுத்துார் ஒன்றியம், தீத்திபாளையம் ஊராட்சியில் நடந்த முறைகேடுகள் மற்றும் தவறுகளை பட்டியலிட்டு, துணை தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு, புகார் மனு அனுப்பியுள்ளனர்.அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:தீத்திபாளையத்தில் பயன்பாட்டில் இருந்த பொதுக்கழிப்பறைக்கு பின்புறம், ஊராட்சி தலைவர் மற்றும், 6வது வார்டு கவுன்சிலரது ஆதரவாளரின் சொத்து உள்ளது. அவர்களுக்காக, ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொது கழிப்பிடத்தை இடித்து, ஊராட்சிக்கு நிதி இழப்பு செய்திருக்கிறார்கள்.வட்டார வளர்ச்சி அலுவலர், கலெக்டர் அனுமதி பெறாமல், டிராக்டர் வாங்கப்பட்டுள்ளது. எட்டாவது வார்டு, முருகன் நகரில், 'ரிசர்வ் சைட்'டாக, 6 சென்ட் விடப்பட்டுள்ளது.ரோடு, 'ரிசர்வ் சைட்' போன்றவற்றை, ஊராட்சிக்கு ஒப்படைக்கவில்லை. ஆனால், ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றாமல், ஒப்புதல் பெறாமல், 'ரிசர்வ் சைட்'டில் ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.20 லட்சத்துக்கு, மேல்நிலைத்தொட்டி கட்டப்படுகிறது.ராஜேந்திரன் ஒர்க் ஷாப் முதல், விஜயலட்சுமி வீடு வரை ரோடு போட்டதாக கணக்கு காட்டி, ஊராட்சி நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தால், ரோடு பணி நடக்கவில்லை. அன்னை வேளாங்கன்னி நகரில், கபடி, கூடைப்பந்து, வாலிபால் மைதானம் அமைத்ததாக, நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது.தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தில், ஊராட்சி தலைவரோ, கவுன்சிலர்களோ, குடும்ப உறுப்பினர்களோ பயனாளியாக பயன்பெறக்கூடாது. கவுன்சிலர் ஜெகன், தனது தாயாரை பயனாளியாக சேர்த்து, மாட்டு கொட்டகை அமைக்க, அனுமதி பெற்றுள்ளார்.ஊராட்சி தலைவர் கந்தசாமி, கவுன்சிலர் ஜெகன், ஊராட்சி செயலாளர் ஆகியோர் அதிகார துஷ்பிரயோகம் செய்து, நிதி கையாடல் செய்திருக்கின்றனர்.கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், நிர்வாகத்தை சீர்குலைக்கிறார்கள். விசாரணை நடத்தி, நிதி முறைகேடு மற்றும் ஊழல் தொடர்பாக, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகார் மனுவில் கூறியுள்ளனர்.என்ன சொல்கிறார் ஊராட்சி தலைவர்?புகார் குறித்து, ஊராட்சி தலைவர் கந்தசாமியிடம் கேட்டபோது, ''குடிநீர் தொட்டி கட்ட இடம் தேடினோம்; அங்கீகாரமற்ற மனைப்பிரிவில் உள்ள, 'ரிசர்வ் சைட்'டில் கட்டுகிறோம். உள்ளாட்சி தேர்தலுக்கு முன், கழிப்பறை இடிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் கட்டுவதற்கு முடிவு செய்தோம். பள்ளவாரி இடத்தில் கட்டக்கூடாது என கூறியதால், நிறுத்தி வைத்தோம். மைதானம் அமைக்க தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. எம்.பி., நிதி ஒதுக்க கோரியுள்ளோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X