சிட்டி கிரைம் செய்திகள்: மளிகை கடை உடைத்து திருட்டு

Added : ஆக 04, 2021
Share
Advertisement
பா.நா.பாளையம், பொன்னி நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் சுடலைமுத்து. இரவில் கடையை பூட்டி சென்ற பிறகு, பூட்டை உடைத்து அங்கிருந்த சிகரெட், பீடி உள்ளிட்ட, 15,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.டெம்போவில் பேட்டரி திருட்டுபா.நா.பாளையம், பொன்னிநகரில் சவுண்ட் சிஸ்டம் நடத்தி வருபவர் சிவகுருநாதன். கடை முன், டாடா ஏஸ்

பா.நா.பாளையம், பொன்னி நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் சுடலைமுத்து. இரவில் கடையை பூட்டி சென்ற பிறகு, பூட்டை உடைத்து அங்கிருந்த சிகரெட், பீடி உள்ளிட்ட, 15,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை, மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

டெம்போவில் பேட்டரி திருட்டு

பா.நா.பாளையம், பொன்னிநகரில் சவுண்ட் சிஸ்டம் நடத்தி வருபவர் சிவகுருநாதன். கடை முன், டாடா ஏஸ் டெம்போ வேனை நிறுத்தி சென்றார். மறு நாள் வந்து பார்த்த போது, டெம்போவில் பேட்டரியை திருடி சென்றது தெரிய வந்தது. புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

இரண்டு பைக் திருட்டு

சிங்காநல்லுாரை சேர்ந்த சக்தி என்பவர், ரேஸ்கோர்ஸ் ரோட்டில் நிறுத்தி விட்டு மருத்துவமனைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, பைக் திருட்டு போனது தெரிய வந்தது. அதே போல, இடையர்பாளையம் காந்தி நகரை சேர்ந்த செந்தில்குமார்,41, செட்டி வீதி டாஸ்மாக் கடை முன் பைக்கை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். அவரது பைக்கை, மர்ம நபர்கள் திருடி சென்றனர். பெரியகடை வீதி போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு

செல்வபுரம், சுண்டக்காமுத்துார் ரோட்டை சேர்ந்த லதா,23, நேற்று முன்தினம் பூ மார்க்கெட்டிற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். தேர்முட்டி அருகே, அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் நகையை காணவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை பறித்து சென்றது தெரிய வந்தது. வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X