பொது செய்தி

தமிழ்நாடு

கலைப்பாடப்பிரிவுக்கு நிரந்தர ஆசிரியர்கள்; கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கோவை:அரசுப்பள்ளிகளில் அதிக சேர்க்கை கொண்ட கலைப்பாடப்பிரிவுக்கு, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்காததால், ஊதியம் வழங்க முடியாமல், தலைமையாசிரியர்கள் திண்டாடுகின்றனர்.அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தும் போது, அறிவியல் பாடப்பிரிவுக்கு மட்டுமே, சேர்க்கை நடத்த, அனுமதி வழங்கப்படும்.கலைப்பாட பிரிவு வேண்டி, மாணவர்கள் பிற பள்ளிகளை, தேடி செல்வதால்,

கோவை:அரசுப்பள்ளிகளில் அதிக சேர்க்கை கொண்ட கலைப்பாடப்பிரிவுக்கு, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்காததால், ஊதியம் வழங்க முடியாமல், தலைமையாசிரியர்கள் திண்டாடுகின்றனர்.அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தும் போது, அறிவியல் பாடப்பிரிவுக்கு மட்டுமே, சேர்க்கை நடத்த, அனுமதி வழங்கப்படும்.கலைப்பாட பிரிவு வேண்டி, மாணவர்கள் பிற பள்ளிகளை, தேடி செல்வதால், சேர்க்கை குறைவதை தடுக்க, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், தலைமையாசிரியர்களே கலைப்பாட பிரிவு உருவாக்கியுள்ளனர். இப்பாடப்பிரிவு கையாள, தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளதோடு, அவர்களுக்கு பி.டி.ஏ., நிதியில், ஊதியம் வழங்கப்படுகிறது.குறிப்பிட்ட தலைமையாசிரியர் இடமாறுதலில், வேறு பள்ளிகளுக்கு செல்லும் போது, புதிதாக வருபவரின், விருப்ப அடிப்படையிலே, இப்பாடப்பிரிவு செயல்படும்.ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டால், பாடப்பிரிவு மூடப்படுகிறது. அரசு அங்கீகரித்த அறிவியல் பாடப்பிரிவை விட, கலைப்பாடப்பிரிவில் சேர்க்கை, அதிகம் இருந்தும், ஆசிரியர்கள் நியமிக்க, அரசு முன்வராதது ஏன் என, தலைமையாசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.பல ஆண்டு காலமாக நீடிக்கும், இச்சிக்கலை களைய, புதிய அரசாவது, கலைப்பாடப்பிரிவை அங்கீகரித்து, ஆசிரியர்களை நியமிக்க முன்வர வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''அரசுப்பள்ளிகளில் சேர்க்கையை அதிகரிக்க தான், தலைமையாசிரியர்களால் கலைப்பாடப்பிரிவு கொண்டு வரப்படுகிறது. இப்பாடப்பிரிவுக்கு அனுமதி வழங்கி, நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.இப்பாடப்பிரிவுக்கு உயர் கல்வியில் அதிக மவுசு இருந்தும், பள்ளிக்கல்வித்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது, வேதனை அளிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, கலைப்பாடப்பிரிவில் அதிக சேர்க்கை இருக்கும் பள்ளிகளுக்காவது, முதற்கட்டமாக நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்க அரசு முன்வர வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X