பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்த கட்டணத்தில் ஆம்புலன்ஸ் சேவை!

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கோவை:சேவா பாரதி சார்பில், குறைந்த கட்டணத்தில் இயங்கும், ஆம்புலன்ஸ் வசதி நேற்று துவங்கப்பட்டது.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில், கொரோனா நோயாளிகள் மட்டுமல்லாது, விபத்து மற்றும் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் நபர்களை, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காமல் பலரும் சிரமத்திற்குள்ளாக
 குறைந்த கட்டணத்தில்  ஆம்புலன்ஸ் சேவை!

கோவை:சேவா பாரதி சார்பில், குறைந்த கட்டணத்தில் இயங்கும், ஆம்புலன்ஸ் வசதி நேற்று துவங்கப்பட்டது.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில், கொரோனா நோயாளிகள் மட்டுமல்லாது, விபத்து மற்றும் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் நபர்களை, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காமல் பலரும் சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது.இந்நிலையில், கோவை மக்களுக்கென, குறைந்த கட்டணத்தில் இயங்கும் ஆம்புலன்ஸ் வசதி, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சேவா பாரதி சார்பில், துவக்கி வைக்கப்பட்டது. சேவா பாரதியின் பொறுப்பாளர் ராமநாதன் முன்னிலையில், டாக்டர்கள் கார்த்தி, குருமகராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.சேவாபாரதி நிர்வாகிகள் கூறுகையில், 'ஆக்ஸிஜனுடன் கூடிய இந்த ஆம்புலன்ஸ் வசதியை பெறுவதற்கென, '89604 45544' என்ற இலவச எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற சேவையை தமிழகம் முழுவதும் கொண்டு வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X