பொது செய்தி

தமிழ்நாடு

சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விருது

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கோவை:கோவை, சீதாலட்சுமி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, மத்திய அரசின் 'காயகல்ப்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் மூலம், துாய்மை மற்றும் வெளிப்படையான நிர்வாகத்துடன் செயல்படும், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, ஆண்டு தோறும் காயகல்ப் விருதுடன், பரிசு தொகை அறிவிக்கப்படுகிறது.இந்தாண்டு, கோவை

கோவை:கோவை, சீதாலட்சுமி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, மத்திய அரசின் 'காயகல்ப்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் தேசிய சுகாதார இயக்க திட்டத்தின் மூலம், துாய்மை மற்றும் வெளிப்படையான நிர்வாகத்துடன் செயல்படும், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, ஆண்டு தோறும் காயகல்ப் விருதுடன், பரிசு தொகை அறிவிக்கப்படுகிறது.இந்தாண்டு, கோவை மாநகராட்சியில் உள்ள, 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்காக, காயகல்ப் விருதுடன் ரூ.2 லட்சம் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. துடியலுார் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், இரண்டாவது இடம் பெற்றுள்ளது.சீதாலட்சுமி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் டாக்டர் இளமதி கூறுகையில், ''தற்போது இங்கு 30 படுக்கை வசதிகள் உள்ளன. தினமும் 150 புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மாதத்திற்கு 20 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடக்கிறது. துாய்மைக்கு முக்கியத்துவம் அளித்து, சிறப்பான சிகிச்சை அளித்ததன் விளைவாக, இந்த விருது கிடைத்துள்ளது. இதில் கிடைத்த ரொக்க பரிசு, ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X