பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவல் தடுக்க ஒத்துழையுங்க: மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கோவை:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்காக, வியாபாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினருடனான ஆலோசனை கூட்டம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது.அதில், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் பேசியதாவது:கொரோனா பரவல் தடுக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு தனித்தனி அறிவுரை கிடையாது; ஒரே அறிவுரையே பின்பற்றப்படுகிறது. தொழில்நிறுவனத்துக்கு
 கொரோனா பரவல் தடுக்க ஒத்துழையுங்க: மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

கோவை:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்காக, வியாபாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினருடனான ஆலோசனை கூட்டம், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது.அதில், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் பேசியதாவது:கொரோனா பரவல் தடுக்க, மாவட்ட நிர்வாகத்துக்கு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு தனித்தனி அறிவுரை கிடையாது; ஒரே அறிவுரையே பின்பற்றப்படுகிறது. தொழில்நிறுவனத்துக்கு மாநகராட்சி எதிரானது அல்ல.கொரோனா தொற்று பரவலில், கோவை முதலில் இருக்கிறது. அதிகாரிகள் பலரும் துாக்கமின்றி பணிபுரிகின்றனர். வியாபாரம் நன்றாக இருந்தால், எங்களுக்கு வரியினங்கள் வரும். அதன் மூலம் மாநகராட்சி ஊழியர்களுக்கு, சம்பளம் கொடுக்க முடியும்.சூப்பர் மார்க்கெட்டுகளிலும், மருந்து கடைகளிலும் ஒரு மாதத்தில், 34 சதவீதம் கூட்டம் அதிகமாகியிருக்கிறது. நமது மாவட்டத்தில், 43 சதவீதத்தினருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடியிருக்கிறது.அவர்கள் தடுப்பூசி போட்டிருக்கலாம் அல்லது தொற்று வந்து சென்றிருக்கலாம். மீதமுள்ள, 57 சதவீதத்தினருக்கு எப்போது வேண்டுமானாலும், கொரோனா தாக்கலாம். மூன்றாம் அலையும் வரலாம்; நான்காவது அலையும் வரலாம்.வர்த்தக பகுதிகளில், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கடைகளை மாலை, 5:00 மணிக்கு மூட வேண்டும். 7:00 மணி வரை டீக்கடையை திறந்திருந்தால், அவ்வழியாகச் செல்பவர், வண்டியை நிறுத்தி, டீ குடித்து விட்டுச் செல்வார். கூட்டம் கூடுவதற்கு வாய்ப்பு உருவாகும்.தடுப்பூசி மருந்து சப்ளை, குறைவாக இருக்கிறது. மருந்து வரத்துக்கு ஏற்ப, தடுப்பூசி போடப்படுகிறது. முக கவசம் முறையாக அணிய வேண்டும். வர்த்தக நிறுவனத்தினர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு, கமிஷனர் ராஜகோபால் பேசினார்.நிகழ்ச்சியில், துணை கமிஷனர் விமல்ராஜ், மண்டல உதவி கமிஷனர்கள், சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், வர்த்தக நிறுவனத்தினர் பங்கேற்றனர். பின், அனைவரும் கொரோனா தொற்று பரவல் தடுக்க, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X