பொது செய்தி

தமிழ்நாடு

சுவரில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க 'தமிழர் பாரம்பரியம்' ஓவியங்கள்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி அலுவலக சுவர்களில், போஸ்டர் ஒட்டுவதை தடுக்க, தமிழர் பாரம்பரியத்தை விளக்கும் ஓவியங்கள் வரையப்படுகின்றன.கோவை நகர் பகுதியில் அரசு அலுவலக சுவர்கள், பாலங்கள், ரோட்டோர சுவர்கள் மற்றும் காலியிடங்களில் அரசியல் கட்சி போஸ்டர்கள், தனி நபர் துதிபாடும் போஸ்டர்கள், தனியார் நிறுவன விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. வாகன ஓட்டிகள் முகத்தை சுளிக்கும்

கோவை:கோவை மாநகராட்சி அலுவலக சுவர்களில், போஸ்டர் ஒட்டுவதை தடுக்க, தமிழர் பாரம்பரியத்தை விளக்கும் ஓவியங்கள் வரையப்படுகின்றன.கோவை நகர் பகுதியில் அரசு அலுவலக சுவர்கள், பாலங்கள், ரோட்டோர சுவர்கள் மற்றும் காலியிடங்களில் அரசியல் கட்சி போஸ்டர்கள், தனி நபர் துதிபாடும் போஸ்டர்கள், தனியார் நிறுவன விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. வாகன ஓட்டிகள் முகத்தை சுளிக்கும் வகையிலும், கவனத்தை சிதறடிக்கும் வகையிலும், இவை அமைந்திருக்கின்றன.முதல்கட்டமாக, மாநகராட்சி அலுவலக சுவர்களில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க, தமிழர் பாரம்பரியத்தை விளக்கும் ஓவியங்களை வரைய, கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டார்.அதன்படி, மாநகராட்சி மத்திய மண்டல அலுவலக சுவற்றில் இருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.அவற்றை நேற்று பார்வையிட்ட கமிஷனர், இதேபோல், அனைத்து மாநகராட்சி அலுவலக சுவர்களிலும் பொதுமக்களை கவரும் வகையிலான ஓவியங்கள் வரைய அறிவுறுத்தினார். அதன் மீது போஸ்டர் ஒட்டினால், சம்பந்தப்பட்டோர் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X