பொது செய்தி

தமிழ்நாடு

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு ரிசல்ட் ரிலீஸ்! கோவை பள்ளி மாணவர்கள் குஷி

Added : ஆக 04, 2021
Share
Advertisement
கோவை:சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு ரிசல்ட், நேற்று மதியம் வெளியிடப்பட்டது.பொதுத்தேர்வு நடத்தாமல் ரிசல்ட் வெளியானதால், பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு, மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன. இதன்படி, குறிப்பிட்ட பள்ளிக்கான கடந்த மூன்று ஆண்டு பத்தாம் வகுப்பு ரிசல்ட் சராசரி கணக்கிடப்பட்டு, பாடவாரியாக அதிகபட்சமாக வழங்க வேண்டிய மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்களின் சதவீதம்

கோவை:சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு ரிசல்ட், நேற்று மதியம் வெளியிடப்பட்டது.பொதுத்தேர்வு நடத்தாமல் ரிசல்ட் வெளியானதால், பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு, மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன. இதன்படி, குறிப்பிட்ட பள்ளிக்கான கடந்த மூன்று ஆண்டு பத்தாம் வகுப்பு ரிசல்ட் சராசரி கணக்கிடப்பட்டு, பாடவாரியாக அதிகபட்சமாக வழங்க வேண்டிய மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்களின் சதவீதம் உள்ளிட்டவை, சி.பி.எஸ்.இ.,யால் வழங்கப்பட்டது.இதை அடிப்படையாக கொண்டு, பத்தாம் வகுப்பில், மாணவர்கள் எழுதிய பீரியாடிக் தேர்வில் 10 சதவீதம், யூனிட் தேர்வு, அரையாண்டு தேர்வுகளில் இருந்து, 30 சதவீதம், முழு சிலபஸில் இருந்து, பொதுத்தேர்வுக்கு முன்பு நடத்தப்படும் 'ப்ரீ போர்டு டெஸ்ட்'டில், 40 சதவீதம் மற்றும் அகமதிப்பீட்டு தேர்வுக்கு, 20 சதவீதம் என்ற முறையில், மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.இதற்கான அனைத்து ஆவணங்கள், பள்ளி தரப்பில் இருந்து, சமர்ப்பிக்க வேண்டுமென்பதால், கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதாக, பள்ளி முதல்வர்கள் தெரிவித்தனர். கோயமுத்துார் சகோதயா பள்ளிகள் சங்க தலைவர் நவமணி கூறுகையில், ''பொதுத்தேர்வு நடத்தாத நிலையில், சி.பி.எஸ்.இ., விதித்த நிபந்தனைகள் அடிப்படையில், மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதியிருந்தால் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்போம் என பலரும் தெரிவிக்கின்றனர். பொதுத்தேர்வுக்கு ஆயத்தமான நிலையில், தொற்று பரவல் அதிகரித்ததால், வாரியம் எடுத்த முடிவை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X