கஞ்சா விற்பவர்களுக்கு ஆதரவா? போலீசாரை கண்டித்து மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்பவர்களுக்கு ஆதரவா? போலீசாரை கண்டித்து மறியல்

Added : ஆக 04, 2021 | கருத்துகள் (1)
Share
பெ.நா.பாளையம்:துடியலூரில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ., மற்றும் மா.கம்யூ., கட்சியினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.துடியலூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், மாநகராட்சி ஆரம்பப்பள்ளி உள்ளது. தற்போது, பள்ளி இயங்காத நிலையில், இவ்வளாகத்தில் மாலை நேரங்களில், கும்பல், கும்பலாக கஞ்சா புகைக்கும் நபர்களின் எண்ணிக்கை,
 கஞ்சா விற்பவர்களுக்கு ஆதரவா? போலீசாரை கண்டித்து மறியல்

பெ.நா.பாளையம்:துடியலூரில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ., மற்றும் மா.கம்யூ., கட்சியினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.துடியலூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், மாநகராட்சி ஆரம்பப்பள்ளி உள்ளது. தற்போது, பள்ளி இயங்காத நிலையில், இவ்வளாகத்தில் மாலை நேரங்களில், கும்பல், கும்பலாக கஞ்சா புகைக்கும் நபர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.மாலை நேரத்தில், போன் செய்தவுடன், ஆடம்பரமான பைக்குகளில் வலம் வரும் கஞ்சா விற்பனையாளர்கள், இக்கும்பலுக்கு கஞ்சா சப்ளை செய்து விடுகின்றனர்.இது குறித்து, நேற்றுமுன்தினம், அப்பகுதியை சேர்ந்த சிலர், துடியலூர் போலீசில் புகார் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த கஞ்சா புகைக்கும் பழக்கம் உடைய சிலர், நேற்று காலை அப்பகுதியில் உள்ள, புகார் தெரிவித்த சிலரின் வீடுகளுக்குள் புகுந்து, மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து, துடியலூர் போலீசாருக்கு புகார் தெரிவித்தும், மிரட்டல் விடுத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கவில்லை இதையடுத்து, நேற்று மாலை எஸ்.டி.பி.ஐ., கவுண்டம்பாளையம் தொகுதி தலைவர் ஹர்சன் பாதுஷா, செயலாளர் அகமது சிகாபுதீன், மா.கம்யூ., முன்னாள் கவுன்சிலர் விஜயா உள்ளிட்டோர் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர், கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்யக்கோரி, துடியலூர் பஸ் ஸ்டாண்டில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்களுடன், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் பேச்சு நடத்தி, கஞ்சா விற்பனையாளர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X