முக கவசம் அணிய அலட்சியம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அணிய அலட்சியம்

Added : ஆக 04, 2021
Share
திருப்பூர்;கொரோனா காலகட்டமான தற்போது தலைமை அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லுாரிக்கு வருவோர் கட்டாயம் முககவசத்தை சரியாக அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நோயாளிகள், அவர்களை காண வருவோர் சரிவர இதனை பின்பற்றுவதில்லை.இது குறித்து, டாக்டர்கள் கூறியதாவது:நோயாளிகளை பார்வையிட செல்லும் போது கூட முக கவசத்தை முழுமையாக அணிவதில்லை. சரியாக முக கவசம்

திருப்பூர்;கொரோனா காலகட்டமான தற்போது தலைமை அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லுாரிக்கு வருவோர் கட்டாயம் முககவசத்தை சரியாக அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நோயாளிகள், அவர்களை காண வருவோர் சரிவர இதனை பின்பற்றுவதில்லை.இது குறித்து, டாக்டர்கள் கூறியதாவது:நோயாளிகளை பார்வையிட செல்லும் போது கூட முக கவசத்தை முழுமையாக அணிவதில்லை. சரியாக முக கவசம் அணியுங்கள் என ஒவ்வொருவரிடம் கூறி, அதன் பின் அருகில் சென்று மருத்துவம் பார்க்க வேண்டியுள்ளது.'உங்களுக்கு தான் தொற்று வர வாய்ப்பு எளிதாகி விடும்; முககவசம் சரியாக அணியுங்கள் என, எவ்வளவு எடுத்து கூறினாலும் ஒரு சிலர் மட்டுமே காதில் வாங்கிக் கொள்கின்றனர். பலர்,' உங்களுக்கு தொற்று இல்லை இல்லையா... அதனால் எங்களுக்கு வராது,' என எதிர்வாதம் பேசுகின்றனர்.நோயாளியாக இருப்பதால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் கண்டிக்க முடியவில்லை. இவர்கள் தான் இப்படி என்றால், மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்களும் முக கவசம் அணியாமல் வருகின்றனர். நாங்கள் தான் பயந்து பணியாற்ற வேண்டியுள்ளது.இவ்வாறு, டாக்டர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X