மின்வாரிய வேலை வாய்ப்பு : ஐ.டி.ஐ., தொழிலாளர்கள் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்வாரிய வேலை வாய்ப்பு : ஐ.டி.ஐ., தொழிலாளர்கள் மனு

Added : ஆக 04, 2021
Share
திருப்பூர்:மின்வாரியத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென, தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மின்வாரியத்தில் உள்ள பயிற்சி முடித்த தொழிலாளர்கள் நேற்று, கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கோவை, திருப்பூர் மாவட்டத்தில், மின்வாரியத்தில், ஐ.டி.ஐ., தொழில் பழகுனர் பயிற்சி முடித்துள்ளோம். கடந்த, 1996ல், கருணாநிதி முதல்வராக
 மின்வாரிய வேலை வாய்ப்பு : ஐ.டி.ஐ., தொழிலாளர்கள் மனு

திருப்பூர்:மின்வாரியத்தில் பயிற்சி முடித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென, தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மின்வாரியத்தில் உள்ள பயிற்சி முடித்த தொழிலாளர்கள் நேற்று, கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கோவை, திருப்பூர் மாவட்டத்தில், மின்வாரியத்தில், ஐ.டி.ஐ., தொழில் பழகுனர் பயிற்சி முடித்துள்ளோம். கடந்த, 1996ல், கருணாநிதி முதல்வராக இருந்த போது, ஐ.டி.ஐ., முடித்தவர்களுக்கு, மின் வாரியத்தில், ஒரு ஆண்டு பயிற்சி அளித்து, வேலை வாய்ப்பும் வழங்கினார்.அடுத்துவந்த அ.தி.மு.க., அரசு, அதனை பின்பற்றவில்லை. இடஒதுக்கீடு இல்லாமல், வேலைக்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி வழங்கியது போல், தற்போதைய முதல்வர் ஸ்டாலினும், ஐ.டி.ஐ.,பயிற்சி முடித்தவர்களுக்கு, மின்வாரிய பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X