சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பிளம்பர்' கொலை: கொசஸ்தலை ஆற்றில் வீசிய கொடுமை

Added : ஆக 04, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை: செலவிற்கு பணம் தராததால் ஆத்திரமடைந்தவர்கள், பிளம்பரை அடித்து கொலை செய்து, கொசஸ்தலை ஆற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதன்குமார், 24. இவரை தவிர, ஐந்து பேர் பிளமிங் வேலைக்காக, தாமரைப்பாக்கம் அருகே, பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை 31ம் தேதி, மதன்குமார் மற்றும்

ஊத்துக்கோட்டை: செலவிற்கு பணம் தராததால் ஆத்திரமடைந்தவர்கள், பிளம்பரை அடித்து கொலை செய்து, கொசஸ்தலை ஆற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதன்குமார், 24. இவரை தவிர, ஐந்து பேர் பிளமிங் வேலைக்காக, தாமரைப்பாக்கம் அருகே, பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை 31ம் தேதி, மதன்குமார் மற்றும் ஐந்து பேர் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கச் சென்றனர். அங்கு பணம் இல்லை என, திரும்பிக் கொண்டு இருந்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், மதன்குமாரிடம் பணம் கேட்டு சண்டையிட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மதன்குமார், பணம் இல்லை என கூறியதும், ஆத்திரமடைந்த கும்பல், அவரை அடித்துக் கொலை செய்து, அருகில் ஓடிய கொசஸ்தலை ஆற்றில் வீசியுள்ளனர். பின், அங்கிருந்து தப்பி ஓடினர்.
கொசஸ்தலை ஆற்றில் பிணம் ஒன்று கரைசேர்ந்ததைக் கண்ட மக்கள், வெங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெங்கல் போலீசார் சிலரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X