பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்... ஸ்ரீருத்ர ஜப பாராயணம்

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திருப்பூர் மற்றும் உலக மக்கள் நலன் வேண்டி, ஓடக்காடு பஜனை மடத்தில், ஸ்ரீருத்ர ஜபம் பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதியின் உத்தரவுப்படி, உலக மக்கள் நலனுக்காக, சிவபெருமானுக்கு உகந்த ஸ்ரீருத்ர ஜபம் பாராயணம் நடத்தப்படுகிறது. அதன்படி, ஓடக்காடு ஸ்ரீகாஞ்சி காமகோடி பக்த சமாஜம் சார்பில், நேற்று, ஸ்ரீருத்ர ஜபம் நடைபெற்றது. நேற்று காலை, 8:00 மணிக்கு துவங்கிய
 சில வரி செய்திகள்... ஸ்ரீருத்ர ஜப பாராயணம்

திருப்பூர் மற்றும் உலக மக்கள் நலன் வேண்டி, ஓடக்காடு பஜனை மடத்தில், ஸ்ரீருத்ர ஜபம் பாராயணம் நடைபெற்றது. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதியின் உத்தரவுப்படி, உலக மக்கள் நலனுக்காக, சிவபெருமானுக்கு உகந்த ஸ்ரீருத்ர ஜபம் பாராயணம் நடத்தப்படுகிறது. அதன்படி, ஓடக்காடு ஸ்ரீகாஞ்சி காமகோடி பக்த சமாஜம் சார்பில், நேற்று, ஸ்ரீருத்ர ஜபம் நடைபெற்றது. நேற்று காலை, 8:00 மணிக்கு துவங்கிய ஜபத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதியின் அறிவுறுத்தலின்படி, ஜபம் நிகழ்வுகளை மேற்கொண்டு, வழிபட்டனர்.

குரங்குகள் அட்டகாசம்

வெள்ளகோவிலில், பொதுமக்களை அச்சுறுத்தும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.வெள்ளகோவில், நத்தக்காட்டுத்தோட்டம், ராஜீவ் நகரில் 5 மற்றும் 6ம் நம்பர் ரேஷன் கடையருகே மரங்கள் மற்றும் வீடுகளின் மேலே, மூன்று குரங்குகள் ஏறி இறங்கி வருகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.சென்னிமலை பகுதியில் இருந்து குரங்குகள் வந்திருக்கலாம் என்றும், வனத்துறையினர் குரங்குகளைப் பிடித்து வனத்துக்குள் விட வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

'பென்ஷன் கிடைக்கலே'

தாராபுரம் சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலை பள்ளியில்தமிழாசரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர், சாந்தி, 63 என்பவர், கலெக்டர் ஆபீசில் கொடுத்த மனுவில், 'கடந்த 2015ல் ஓய்வு பெற்ற எனக்கு இதுநாள் வரை உதவி கிடைக்கவில்லை. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த போது, பேசி தீர்க்கலாம் என்றதால், வழக்கை வாபஸ் பெற்றேன். தமிழாசிரியராக பணியாற்றிய எனக்கு, ஓய்வூதியம் கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென, முதல்வரின் தனிப்பிரிவில், இதுவரை நான்கு முறை மனு கொடுத்துள்ளேன். வாழ வழியில்லாமல் தவிக்கும் எனக்கு, தமிழக அரசு நீதி வழங்க வேண்டும்,' என கூறியுள்ளார்.

ம.நீ.ம., வேண்டுகோள்
திருப்பூர் மாவட்ட மக்கள் நீதி மைய நிர்வாகிகள், கலெக்டர் ஆபீசில் அளித்த மனுவில், 'ஏழு நாட்களுக்கு முன் கிராமசபை கூட்ட அறிவிப்பு கொடுக்க வேண்டும். வரவு - செலவு அறிக்கையை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். மக்கள் முன்வைக்கும் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். கூட்டம் நிறைவு பெற்றதும், தீர்மான நகல் கேட்கும் மக்களுக்கு நகல் கொடுக்க வேண்டும். மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமசபை உறுப்பினர்கள், கூட்டத்தை படம், வீடியோ எடுக்க அனுமதிக்க வேண்டும்,' என்று கூறியுள்ளனர்.

வேப்பங்காய் சீசன் துவக்கம்

ஆடி மாதம் வேப்பங்காய் சீசன் காலம். வேப்பங்காய் எண்ணெய் எடுக்கவும், சிறந்த இயற்கை உரமாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுவதால் இதற்கான தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனை சேகரிக்கும் சிலர் கூறுகையில், 'வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள வயதானவர்கள் மட்டுமே இதில் ஈடுபட்டுள்ளோம். ஒரு கிலோ, 25 ரூபாய், வேப்பங்கொட்டை கிலோ, 40 ரூபாய்க்கும் விலை போகிறது. வியாபாரிகள் வந்து வாங்கிச் சென்று விடுகின்றனர். இயற்கை விவசாயம் செய்பவர்களும் தேடி வந்து வாங்கி கொள்கின்றனர்,' என்றனர்.

25 லட்சம் பேர் பயணம்

அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் என்பதால், பெண்கள் அதிகளவில் டவுன் பஸ்களில் பயணிக்கின்றனர். தனியார் பஸ்களை தவிர்த்து, அரசு பஸ் வரும் வரை காத்திருந்து பயணிக்கின்றனர். தற்போது, நாள் ஒன்றுக்கு திருப்பூர் மண்டலத்தில் ஒரு லட்சம் பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர். கடந்த, 28 நாட்களில், 25 லட்சம் பேர் டவுன் பஸ்களில் இலவசமாக பயணித்துள்ளனர். பெண்களுக்கு இலவச பயணம் என்பதால், 80 முதல், 85 லட்சமாக இருந்த திருப்பூர் மண்டலத்தின் வருவாய், 45 முதல், 50 லட்சம் ரூபாயாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வடிவில் பழம்

சாலையோர வியாபாரிகள் புதிது, புதிதாக பழங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். அவற்றில் கொரோனா வடிவில் விற்பனைக்கு வந்துள்ள 'ரம்புட்டான்' என்று சொல்லப்படுகின்ற பழங்களும் ஒன்று. அவை நமது மாநிலத்தில் விளைவதில்லை. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மலைப்பிரதேச பகுதிகளில் மட்டும் விளைவதாக வியாபாரிகள் கூறினர். அது கிலோ, 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிளம்ஸ், பேரீச்சை, நாவல் பழங்கள் கூட முறையே, 240, 200, 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால், கொரோனா வடிவில் உள்ள பழத்திற்கு மட்டும் மிக அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமூக விரோதிகள் அட்டகாசம்

கொரோனா ஊரடங்கு மற்றும் பரவல் காரணமாக பல மாதங்களாக பள்ளிகள் பூட்டி கிடக்கின்றன. இதனை சாதமாக்கி கொண்டு அரசு பள்ளியில் நுழையும் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்தல், குடிநீர் பைப், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு போன்றவற்றை சேதப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகள் திறந்தாலும் அவற்றை சுத்தம் செய்து, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. கோவில்களைப் போல போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள் பள்ளிகள். அவற்றை சீர்குலையச் செய்யும் சமூக விரோதிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X