சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி: கஞ்சா விற்ற இருவர் கைது

Added : ஆக 04, 2021
Share
Advertisement
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு பகுதியில், டூவீலரில் சந்தேகப்படும் விதமாக நின்ற அரூரை சேர்ந்த மணிகண்டன், 30; திருப்பூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டேவிட் ராஜ், 34 ஆகியோரது டூவீலரை வடக்கு போலீசார் சோதனை செய்தனர். அதில், ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா பொட்டலம் வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, கஞ்சா பொட்டலம், டூவீலரை வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.வாலிபருக்கு

திருப்பூர், கொங்கு மெயின் ரோடு பகுதியில், டூவீலரில் சந்தேகப்படும் விதமாக நின்ற அரூரை சேர்ந்த மணிகண்டன், 30; திருப்பூர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டேவிட் ராஜ், 34 ஆகியோரது டூவீலரை வடக்கு போலீசார் சோதனை செய்தனர். அதில், ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா பொட்டலம் வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, கஞ்சா பொட்டலம், டூவீலரை வடக்கு போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாலிபருக்கு வெட்டு

பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையம் பாபுஜி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த், 28, பனியன் தொழிலாளி. காளம்பாளையம் ரோடு தனியார் கல்லூரி அருகே சென்றபோது, பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று, அவரை மறித்து மொபைல் போனை பறித்து, கத்தியால் தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். அருகிலிருந்தோர், அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

கோஷ்டி மோதல்; மூவர் காயம்

பல்லடம் - கவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள மதுக்கடையில், நேற்று முன்தினம், இரு கோஷ்டியை சேர்ந்தவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பில் ஈடுபட்டனர். அதில், மணிகண்டன், கண்ணன், சங்கரலிங்கம் ஆகியேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

நடத்துனரை தாக்கிய இருவர் கைது

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்லடம் நோக்கி டவுன் பஸ் ஒன்று பயணிகளுடன் சென்றது. அதில், மேற்கு வங்கத்தை சேர்ந்த, 10 பேர் பயணம் செய்தனர். சில வாலிபர்கள் படியில் நின்று ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். இதை பார்த்த நடத்துனர் குமரேசன், 31 என்பவர் அறிவுறுத்தினார். கோபமடைந்த வாலிபர்கள், அவரை தாக்கினர். புகாரின் பேரில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சிசல் காந்த், 21; ஆசாத் மோண்டல், 20 ஆகியோரை வீரபாண்டி போலீசார் கைது செய்தனர்.

சாராய ஊறல் அழிப்பு

முத்தூர் அருகே மேட்டாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, 56. அவரின் வீட்டில் 15 லிட்டர் சாராய ஊறல் போட்டிருந்தார். தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.ஐ., முரளிதரன் அங்கு ரெய்டு நடத்தி, மாரி முத்துவை கைது செய்தார்; சாராய ஊறல் அழிக்கப்பட்டது.பணம் திருடிய பூசாரி கைதுவீரபாண்டி, பலவஞ்சிபாளையம் ரோடு ஜெ.ஜெ., நகரில் வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் சில மாதம் முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, பக்தர்களால் காணிக்கையாக பெறப்பட்ட, 1.50 லட்சம் ரூபாய் உண்டியலில் வைக்கப்பட்டு இருந்தது. இரு நாள் முன்பு, கோவிலில் இருந்து உண்டியல் திருடு போனதாக பூசாரி, கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தார். வீரபாண்டி போலீசார் விசாரித்தனர். அதில், கோவில் பூசாரியாக உள்ள மணிகண்டன், 30 என்பவர் பணத்தை திருடியதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X